எம்பிலிபிட்டிய, கல்வங்குவ பிரதேசத்தில் குடிபோதையில் கார் ஒன்றை செலுத்திச் சென்ற நபர், 5 வாகனங்கள் மீது மோதியதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர் 73 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் 3 முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றுமொரு காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.