தலங்கம நெரலு உயன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் வசமிருந்த தேசிய அடையாள அட்டையில் இருந்து அவர் 1973 ஆம் ஆண்டு பிறந்தவர் என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மரணம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பெண் ஒரு மனநல மருத்துவர் என்றும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார் என்றும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version