இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.3,127 ஆக இருக்கும்.

5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையும் 58. ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,256 ரூபாவாகும்.

இதேவேளை 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலையை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 587 ரூபாவாகும்.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version