நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதன்போது, சம்மந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் இன்றைய தினம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய, இன்றைய தினம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version