பிரிட்டனை சேர்ந்த 8சுற்றுலாப்பயணிகள் உட்பட 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட காரணமான 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான அதிகாரியொருவருக்கு தொடர்புள்ளதாக உள்ளக விடயங்களை அறிந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

சனல்4 வெளியிடவுள்ள இது குறித்த வீடியோவில் உள் விடயங்களை நன்கு அறிந்த நபர் ஒருவர் 2018 இல் சிரேஸ்ட இராணுவபுலனாய்வு அதிகாரி சுரேஸ் சாலேயிற்கும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்ட நபர்களுக்கும் இiடியல் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ததாக தெரிவித்துள்ளார் .

இலங்கையை பலவீனப்படுத்தி ராஜபக்சவின் மீள் வருகையை உறுதி செய்வதற்கான சதிதிட்டத்தை உருவாக்குவதற்காக இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றது என டைம்ஸ் யுகே தெரிவித்துள்ளது.

அந்த சந்திப்பு முடிவடைந்ததும் சுரேஸ் சாலே என்னிடம் வந்து ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு இலங்கையில் பாதுகாப்பற்ற நிலை அவசியம் என தெரிவித்தார்,அதன் மூலம் மாத்திரம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக முடியும் என தெரிவித்தார் ஹன்சீர் ஆசாத் மௌலானா என்பவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் தாக்குதல் குறித்துதிட்டமிடப்படவில்லை இரண்டு மூன்று வருடங்களாக இந்த விடயம் திட்டமிடப்பட்டது என அவர்தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு மாதங்களின் பின்னர் இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்ற வாக்குறுதியுடன் கோட்டாபய ஆட்சிக்கு வந்தார் சாலே இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக பதவி உயர்த்தப்பட்டார்.

கோட்டபாய ராஜபக்ச முன்னர் தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தவர்,இருவரும் இணைந்து விடுதலைப்புலிகளை ஒடுக்கியதற்காக பாராட்டு பெற்றனர் எனினும் 2015 தேர்தலில் தோல்வியடைந்தனர், பின்னர் அவர் சட்டத்திற்கு விரோதமான படுகொலைகள் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் பாரிய அளவு ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளைஎதிர்கொண்டார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் ராஜபக்சகுடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாக நீண்டகாலமாக இலங்கையில் வதந்திகள் காணப்படுகின்றன எனினும் சனல் 4 இன் முன்னாள் செய்தியாசிரியர் பென் டெ பியரின் பேஸ்மன்ட் பிலிம்ஸ் தயாரித்துள்ள புதிய விவரணச்சித்திரம் முதன்முதலாக கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரிகளுக்கும் குண்டுதாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து பெரியஅளவில் பேசுகின்றது.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து கடந்த வருடம் இடம்பெற்ற மக்கள்எழுச்சியின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

இலங்கையிலிருந்து கடந்த வருடம் வெளியேறிய மௌலானா ஐரோப்பிய புலனாய்வு பிரிவினர் ஐக்கிய நாடுகள் அமைப்புகளிடம் இது குறித்த வாக்குமூலங்களை வழங்கியிருந்தார்,அவர்கள் இது குறித்த தகவல்களை நம்பகதன்மை மிக்கவையாக அவர்கள் கருதுவதுடன் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 43 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர்,பென் நிக்கொலசன் என்ற பிரிட்டிஸ் பிரஜை உயிர்தப்பினார் ஆனால் தனது மனைவியையும் இரு பிள்ளைகளையும் இழந்தார், ஆடைத்தொழில் துறையின் மிகப்பிரபல நிறுவனமான அசோசில் பெருமளவு பங்குகளை கொண்டுள்ள டென்மார்க்கின் கோடீஸ்வரர் அன்டெர்ஸ் பொவ்சென் தனது பிள்ளைகள் மூவரை இழந்தார்.

சாலேயிற்கும் குண்டுதாரிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து மௌலானா தெரிவித்;துள்ள விடயங்களை அரசாங்கத்தின் பெயரை வெளியிடவிரும்பாத சிரேஸ்ட அதிகாரியொருவரும் உறுதி செய்துள்ளார்.

இரகசியங்களை வெளியிட்டுள்ள இரண்டாவது நபரான அவர் குண்டுவெடிப்பிற்கு முன்னரும் அதற்கு பின்னரும் பொலிஸ் விசாரணைகளை புலனாய்வு பிரிவினர் குழப்பினார்கள் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு இரண்டு வாரங்களிற்கு முன்னர் இந்திய புலனாய்வு பிரிவினர் கத்தோலிக்க தேவாலயங்கள் தாக்கப்படலாம் என எச்சரித்ததை காண்பிக்கும் ஆவணங்களையும் சனல் 4 வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

2021இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை வெளியான வேளை அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச விசாரணை அறிக்கையை வெளியிட தவறினார்.

இது குறித்து கடந்த வருடம் பரிசுத்த பாப்பரசரிற்கு வேண்டுகோள் விடுத்திருந்த கர்தினால் மல்கம் ரஞ்சித் சர்வதேச விசாரணைகளை கோரியிருந்தார்.

சாலேயுடன் உள்ள தொடர்புகள் குறித்த விபரங்களை அம்பலப்படுத்தியுள்ளதால் மௌலானாவின் தகவல்கள் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட பிரித்தானிய பிரஜைகளின் சார்பில் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகள் இலங்கைக்குள்ளும் வெளியேயும் நீதியை கோருபவர்களுக்கு முக்கியமானவர்களாக அமையலாம் என தெரிவித்துள்ளனர்.

மௌலானா பல வருடங்களாக ராஜபக்சாக்களின் விசுவாசியான அரசியல்வாதி பிள்ளையானின் உதவியாளராக பணியாற்றியவர் – அரசியல் எதிராளியின் கொலை தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை பிள்ளையான் குண்டுதாரிகளை சந்தித்தார்.

சாலேயும் பிள்ளையானும் இணைந்து அவர்களை சிறையிலிருந்து விடுவித்தனர் அதன் பின்னர் அவர்கள் சாலேயை சந்திப்பதற்கு பிள்ளையான் உதவினார் என மௌலானா தெரிவித்துள்ளார்.

அவர்களை பயன்படுத்தலாம் அவர்களுக்கு உலகில் வேறு எந்த விடயம் குறித்தும் ஆர்வம் இல்லை என பிள்ளையான் அவ்வேளை தெரிவித்துள்ளார்.

குண்டுதாக்குதல் இடம்பெற்ற அன்றைய தினம் அதிகாலை மௌலானாவிற்கு சாலேயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது தாஜ் சமுத்திராவிற்கு சென்றுஒருவரை அழைத்து செல்லுமாறு சாலே கேட்டுள்ளார்,ஆனால் மௌலானா செல்லவில்லை.

Times UK

Share.
Leave A Reply

Exit mobile version