தனது நான்கு வயது மகளை தாக்கிப் பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் என கூறப்படுபவரும் தாயின் சட்டபூர்வமற்ற கணவன் என சந்தேகிக்கப்படும் நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தொரட்டியாவை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களான இவர்கள் குருணாகல் அலகொல்தெனிய மொடர்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

சிறுமியின் முகம், முதுகு மற்றும் கைகால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் தாக்கத்தால் அவரது கண் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

பல நாட்களாக வீட்டில் வைத்து சிறுமி தாக்கப்பட்டு வந்த நிலையில், அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் சிறுமி குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version