நானும் அவ்வேளை எனது தலைவராக காணப்பட்ட பிள்ளையானும் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த வேளை அவர் திரிபோலி என்ற கொலைகுழுவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார் என ஆசாத்மௌலானா சனல் 4 வீடியோவில் தெரிவித்துள்ளார்.

திறமைசாலிகளை தெரிவு செய்து இணைந்து செயற்படுங்கள் என கோட்டாபய கேட்டுக்கொண்டார், ஆகவே பிள்ளையான் தனது நபர்களை வைத்து திரிபோலி கொலைக்குழுவை உருவாக்கினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திரிபோலி பிளாட்டுன் கோட்டாபய ராஜபக்சவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட்டது எனவும் ஆசாத் மௌலானா சனல்4 வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நபர்களை தெரிவு செய்து இலக்குவைத்து திரிபோலி பிளட்டுன் கொலை செய்தது என ஆசாத் மௌலானா சனல்4க்கு தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version