ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து இன்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் வெருகல் – இலங்கை துறைமுகத்துவாரத்தைச் சேர்ந்த சந்திரராஜ் கஜேந்திரராஜ் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

வெருகல் கோயிலில் விசேட வழிபாட்டிற்கு தனது தாய் மற்றும் தம்பி ஆகியோரை கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம் பெற்றதாகவும் தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் ஈச்சிலப்பற்று பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து

தொடர்பில் ஈச்சிலப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version