யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் அற்புதத்தை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் ஸ்ரீகரன் சாந்தகுமாரி என்பவரது வீட்டில் இருக்கும் மாதாவின் உருவச் சிலையில் இருந்தே இவ்வாறு இரத்தம் வழிகின்றது. கடந்த 6ம் திகதி முதல் இன்றுவரை இரத்தம் இடையிடையே வழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

கடந்த 26ம் திகதி பிரான்ஸில் இருந்து இவர்களின் மகள் ஜெயசித்ரா அவர்களினால் குறித்த மாதாவின் உருவச் சிலை கொண்டு வரப்பட்டது.

குறித்த வீட்டில் தரம் 5 ல் கல்வி கற்கும் 10 வயதுடைய ஆர்த்தி எனும் சிறுமிக்கு, மாதா கொண்டு வருவதற்கு முன்னர் கண்ணில் இருந்து இரத்தம் வடிந்துள்ளது.

இதுதொடர்பாக வைத்திய உதவிய நாடிய போதிலும் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளாக தெரிவிக்கின்றனர்.

தற்போதும் சிறுமியின் கண்ணில் இடையிடையே இரத்தம் வழிந்து வருகின்றது. குறித்த அற்புதத்தை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்

Share.
Leave A Reply

Exit mobile version