வடகொரிய தலைவர் கிம்ஜொன் அன் தனதுநாட்டின் புதிய அணுவாயுத நீர்மூழ்கியை நிகழ்வொன்றில் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
வடகொரிய தலைவர் கடற்படை அதிகாரிகளுடன் பாரிய நீர்மூழ்கிக்கு அருகில் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

வடகொரிய தலைவர் பல வருடங்களாக இந்தவகையான நீர்மூழ்கியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.அவரது அணுவாயுத திட்டத்திற்கு நீர்மூழ்கி மிகமுக்கியமானது என்ற கருத்து காணப்பட்டது.