யாழில் வீதியில் செல்வோரிடம் கையடக்கத் தொலைபேசிகளை வழிப்பறி செய்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் கையடக்கத் தொலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை (07) யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர் .

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version