யாழ்ப்பாணம் நீர்வேலியில் சனிக்கிழமை (11) யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version