சிங்­கப்­பூரின் ஜனா­தி­ப­தி­யாக இலங்கை வம்­சா­வ­ளித்­த­மி­ழ­ரான யாழ்ப்­பாணம்  ஊரெ­ழுவை  பூர்­வீ­க­மாகக் கொண்ட  தர்மன் சண்­மு­க­ரட்ணம்  தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

கடந்த  1ஆம் திகதி இடம்­பெற்ற  ஜனா­தி­பதி தேர்­தலில் 70.4 வீத வாக்­கு­களைப் பெற்று  சிங்­கப்­பூரில் அதி­கூ­டிய வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­பெற்ற ஜனா­தி­ப­தி­யாக அவர் சாதனை படைத்­துள்ளார்.

சுமார் 25  இலட்சம் வாக்­கா­ளர்­களை கொண்ட சிங்­கப்­பூரில் ஜனா­தி­பதி தேர்­தலில் 24 இலட்­சத்து 80 ஆயி­ரத்து 860 பேர்  வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.

அதில்  50ஆயி­ரத்து 152 வாக்­குகள்  நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.   அளிக்­கப்­பட்ட வாக்­கு­களில் தர்மன் சண்­மு­க­ரட்ணம்  17 இலட்­சத்து 46 ஆயி­ரத்து 427 வாக்­கு­களைப் பெற்று  வெற்­றி­யீட்­டி­யி­ருக்­கின்றார்.

இவரை எதிர்த்து போட்­டி­யிட்ட ஏனைய இரண்டு வேட்­பா­ளர்­களும் சொற்ப வீத­மான வாக்­கு­க­ளையே பெற்­றி­ருந்­தனர்.

75 வீத­மான  சீனர்­களைக் கொண்ட  சிங்­கப்­பூரில்  இலங்கை வம்­சா­வ­ளித்­த­மிழர் ஒருவர்  ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார்.

அதுவும் 70 வீதத்­துக்கும் மேலான வாக்­கு­களை  அவர்  பெற்று வெற்றி பெற்­றி­ருக்­கின்றார். சிங்­கப்­பூரில் சீனர்கள், மலே, மற்றும்  தமி­ழர்கள் என  பல்­லின மக்கள் வாழ்­கின்­றனர்.

ஜனா­தி­பதி தேர்­தலில்  தமிழர் ஒருவர் வெற்­றி­ பெற்­றுள்­ள­மை­யா­னது சிங்­கப்­பூரில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சக­வாழ்வு மற்றும் மதங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தின்  பிர­தி­ப­லிப்­பா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது. இந்த விட­ய­மா­னது எமது நாடான  இலங்­கைக்கு ஒரு படிப்­பி­னை­யாக அமைந்­தி­ருக்­கின்­றது.

கடந்த  ஐந்து தசாப்­தங்­க­ளுக்கு முன்னர்   சிங்­கப்­பூ­ரா­னது இலங்­கையை முன்­னு­தா­ர­ண­மாக கொண்டு செயற்­ப­டு­ம­ள­வுக்கு எமது நாடா­னது முன்­னோக்­கி­யி­ருந்­தது.

ஆனால் தற்­போது எமது நாடு பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்கி  மிகவும் பின்­தங்­கி­ய­ நி­லையில்    காணப்­ப­டு­கின்­றது.

இதற்கு என்ன காரணம் என்­பதை பின்­நோக்கி பார்க்­க­வேண்­டிய தேவையும் கடப்பாடும் எமக்கு  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

சிங்­கப்­பூ­ரா­னது  பெரும் முன்­னேற்­ற­ம­டைந்த நாடாக திகழ்­வ­துடன்  பல்­க­லா­சார  நாடா­கவும்  பரி­ண­மித்து வரு­கின்­றது.

இன, மத,  கலா­சார வேறுபா­டு­களை மறந்து அந்த நாடு  செயற்­ப­டு­வ­த­னா­லேயே இத்­த­கைய  முன்­னேற்றம்   அங்கு   ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.   சிங்­கப்­பூரின் சிற்பி  என்று  வர்­ணிக்­கப்­படும்  காலஞ்­சென்ற  லீ குவான் யூவின் தூர­நோக்கு சிந்­த­னை­யா­னது இன்று சிங்­கப்­பூரை   முன்­னேற்­றி­யுள்­ளது.

அவ­ரது ஆளு­மை­யான  தலை­மைத்­துவம்  சிங்­கப்­பூரை பல்­க­லா­சார நாடாக  மாற்­றி­யி­ருந்­தது.  இத­னா­லேயே தமிழர் ஒருவர் அந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக   வரக்­கூ­டிய நிலை  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

கடந்த ஐந்து தசாப்­தங்­க­ளுக்கு முன்னர்  இலங்­கையைப் போன்று சிங்­கப்­பூரை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மென்று  லீ குவான் யூ தெரி­வித்­தி­ருந்தார்.

அந்­த­ள­வுக்கு இலங்­கை­யா­னது முன்­னேற்­ற­ம­டைந்த நாடாக அன்று  காணப்­பட்­டது. ஆசி­யா­வி­லேயே  முன்­னு­தா­ர­ண­மான நாடாக அன்று   இலங்கை   திகழ்ந்­தி­ருந்­தது.

ஆனால் பிற்­கா­லத்தில் எடுக்­கப்­பட்ட தவ­றான அர­சியல் தீர்­மா­னங்கள் மற்றும் பெளத்த சிங்­கள  மேலா­திக்­க­வாத  நிலைப்­பா­டுகள்  என்­பன  கார­ண­மாக இலங்­கை­யா­னது  தரம்­தாழ்ந்து  போனது.

சிங்­கப்­பூரின் இன்­றைய வளர்ச்­சிக்கும் எழுச்­சிக்­கு­மான  அடிப்­ப­டை­யான கார­ண­மாக  அமை­வது   இன, மத வேறு­பா­டு­களற்ற பல்­லின கலா­சார   தன்மை என்றால்  அதனை எவரும்  மறுக்க முடி­யாது.

அன்று நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்பை ஏற்­றுக்­கொண்ட  லீ குவான் யூ இன­வாத, மத­வாத  செயற்­பா­டு­க­ளுக்கு  அனு­ம­திக்­காது  நாட்டை  பல்­லின கலா­சாரம் பேணும்­வ­கையில்   உரு­வாக்­கி­யி­ருந்தார். அதன் கார­ண­மா­கவே இன்று  சிங்­கப்பூர்  தலை­மிர்ந்து நிற்­கின்­றது.

சிங்­கப்­பூ­ரா­னது அனைத்து இன மக்­க­ளையும்   ஒரே மக்­க­ளாகக் கொண்டு   முன்­னேறி வரு­கின்­றது.

அங்கு அர­சி­யல்­வா­தி­களை   மக்கள்  திற­மையின் அடிப்­ப­டை­யி­லேயே  தீர்­மா­னிக்கும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

அவர் சீனரா, தமி­ழரா, அல்­லது மலே­யி­னத்தவரா   என்று அந்த மக்கள் சிந்­திக்­க­வில்லை. இதன் கார­ண­மா­கவே தற்­போது இலங்­கையை பூர்­வீ­மாகக் கொண்ட தமிழர் ஒருவர் ஜனா­தி­பதி ஆச­னத்தை  அலங்­க­ரித்­தி­ருக்­கின்றார்.  இத்­த­கைய நிலை கார­ண­மா­கவே பொரு­ளா­தார ரீதி­யிலும்  சிங்­கப்பூர் உயர்ந்து நிற்­கின்­றது.

முன்­னொரு காலத்தில் சிங்­கப்­பூ­ருக்கு  முன்­னு­தா­ர­ண­மாக திகழ்ந்த இலங்கை  இன்று  இன,மத­வாத முரண்­பாட்­டுக்குள் சிக்கி  சின்­னா­பின்­ன­மான நிலையில் காணப்­ப­டு­கின்­றது.

இலங்கை  பெளத்த சிங்­கள  நாடு  என்றும்  இங்­கு­வாழும் சிறு­பான்­மை­யினர்  சிறு செடி­கொ­டிகள்    என்றும் வர்­ணிக்­கப்­பட்­டனர்.  முன்னாள் ஜனா­தி­பதி டி.பி. விஜ­ய­துங்­கவே இத்­த­கைய கூற்­றினை   கூறி­யி­ருந்தார்.

இதே­போன்றே நாட்டை ஆட்சி செய்த சிங்­களத் தலை­மைகள்  பெளத்­தத்­துக்கு   முன்­னு­ரிமை வழங்­கி­ய­துடன்  ஏனைய மதங்­களை புறக்­க­ணிக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டன.

இதே­போன்றே சிங்­கள பெளத்த தேசிய வாதத்தை வளர்த்­த­துடன் ஏனைய  சிறு­பான்மை இனங்­களை  புறக்­க­ணிக்கும்  வகையில் செயற்­பட்­டன.

இவ்­வா­றான  புறக்­க­ணிப்­புக்கள் கார­ண­மா­கவே   தமிழ் இளைஞர், யுவ­திகள்  ஆயுதம் ஏந்­த­வேண்­டிய நிலைமை  ஏற்­பட்­டி­ருந்­தது.

மூன்று தசாப்­த­கால  யுத்­த­மா­னது நாட்டில் பேர­ழி­வு­களை  ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.   இந்த யுத்­தத்­துக்­காக   பெரு­ம­ளவு  நிதி செல­வி­டப்­பட்­டது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும்   வகை தொகை­யின்றி கடன்கள்  பெறப்­பட்­டன.  நாட்டில் யுத்தம் இடம்­பெற்­றதே தவிர எத்­த­கைய  அபி­வி­ருத்­தி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.  இதன் கார­ண­மாக நாடு  பெரும் பின்­ன­டைவை சந்­தித்­தி­ருந்­தது.

நாட்டில்   மூன்று தசாப்­த­கால யுத்தம் பேர­ழி­வு­களை   ஏற்­ப­டுத்தி  இருந்த போதிலும்  இன்­னமும்  வர­லாற்­றுத்­த­வ­று­களை உணர்ந்து  அந்­த ­ப­டிப்­பி­னை­களைப் பெற்று எம்­மை­ தி­ருத்­திக்­கொள்­வ­தற்கு எவரும்  தயா­ரா­க­ இல்லை.

சிறு­பான்­மை­யின மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண்­ப­தற்கு   இன்­னமும்   பெளத்த சிங்­கள  பேரி­ன­வாதம்  தயா­ராக இல்­லாத நிலைமை  காணப்­பட்டு வரு­கின்­றது.

சிறு­பான்­மை­யின மக்­களின்  பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காணப்­பட்டு  நாட்டில்  இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்கம் ஏற்­ப­டு­மானால் அது   நாடு முன்­னே­று­வ­தற்கு வழி சமைக்கும்  என்று   தெரிந்­தி­ருந்த போதிலும் சுய­நல அர­சி­யல்­நோக்­கங்­களை கருத்தில் கொண்டு   அதற்கு எதி­ரான செயற்­பா­டு­களே    தற்­போதும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் சிறு­பான்­மை­யின மக்­களின் பிர­தி­நி­திகள்  ஜனா­தி­ப­தி­யா­கவோ பிர­த­ம­ரா­கவே   வரக்­கூ­டிய   சூழ்­நிலை   இது­வரை ஏற்­ப­ட­வில்லை.  நாட்டில் இன­வா­தமும் மத­வா­தமும்  தலை­தூக்­கி­யுள்ள நிலையில்  சிறு­பான்­மை­யின  பிர­தி­நிதி ஒருவர் இந்த  உய­ரிய பத­வி­க­ளுக்கு   வரு­வது என்­பது வெறும் கானல் நீரா­கவே இருக்கும். ஏனெ­னில்­ இ­லங்­கையில் சிங்­க­ள­வர்கள்  75 வீதத்­துக்கும் மேல் காணப்­ப­டு­கின்­றனர்.

இந்த நிலையில் அவர்­க­ளது   மனங்­களில் மாற்றம்  ஏற்­படும் வரையில்  இத்­த­கைய உயர் பத­வி­க­ளுக்கு  சிறு­பான்­மை­யின பிர­தி­நி­திகள்   வர­மு­டி­யாது.

ஆனால் சிங்­கப்­பூரில் 75வீத­மானோர்  சீனர்­க­ளாக இருக்­கின்ற போதிலும் அங்கு  சிறு­பான்­மை­யாக உள்ள   தமிழர் ஒருவர்  ஜனா­தி­ப­தி­யாக அதுவும்   70 வீதத்­துக்கும் மேல­தி­க­மாக வாக்­கு­களை  பெற்று தெரி­வா­கி­யி­ருக்­கின்றார் என்பது மிகப் பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

எனவே இதி­லி­ருந்து   சிங்­கப்பூர் மக்­களின் மன நிலையில் உள்ள மாற்­றத்தை  அவ­தா­னிக்க முடி­கின்­றது. அவ்­வா­றான  மக்கள்  மனங்­களில்  மாற்றம்  ஏற்­பட்­டால்தான்   ஒரு­நாடு  முன்­னோக்கி செல்ல முடியும். ஆனால் எமது நாட்டில்   அதற்­கான   சூழ்­நிலை இன்­னமும்   ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இத்­த­கைய போக்கு எமது நாட்டில் தொடரும் வரை   நாடு  முன்­னோக்கி செல்­வது என்­பது  சாத்­தி­யப்­ப­டாத ஒன்­றா­கவே  காணப்­படும். தெற்கின் ஆட்­சி­யா­ளர்­களைப் பொறுத்­த­வ­ரையில் நாட்டை   முன்­னேற்­று­வதை   விட  சிங்­கள பெளத்த  தேசி­ய­வா­தத்தை  வளர்க்கும்   செயற்­பாட்­டி­லேயே  அக்­கறை  காண்பித்து வருகின்றனர்.

அவ்வாறான  நிலை  இருந்தால்தான் தமது வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்று அவர்கள் இன்னமும் எதிர்பார்க்கின்றனர்.

உண்மையிலேயே சிங்கப்பூரில் இன்று நிகழ்ந்திருப்பது   இலங்கையில் எப்போதோ   இடம்பெற்றிருக்கவேண்டிய விடயமாகும்.

ஒரு பல்லின, பல்மத கலாசாரம் கொண்ட நாடாக   இலங்கையை கட்டியெழுப்பியிருந்தால்  அனைத்து மக்களினதும் பங்களிப்புடன் இலங்கையை   முன்னேற்றியிருக்க முடியும்.

அவ்வாறு  முன்னேற்றம் கண்டிருந்தால் இன்று இலங்கையானது தெற்காசியாவில் தலைசிறந்த நாடாக  திகழ்ந்திருக்கும். ஆனால் இன்றோ இலங்கையானது சிங்கப்பூரை  பார்த்து மலைத்து நிற்கும் நிலையில் காணப்படுவது  துரதிஷ்டவசமானதாகும்.

எனவே இனியாவது  சிங்கப்பூரை முன்னுதாரணமாக கொண்டு  பல்லின, பல் கலாசார  நாடாக இலங்கையை  கட்டியெழுப்புவதற்கு   அரசியல் தலைமைகள்   முன்வரவேண்டும்.  அவ்வாறான மாற்றம் ஒன்று ஏற்பட்டால்தான்  இலங்கையின் முன்னேற்றம்  சாத்திப்படும் என்பதை  சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Share.
Leave A Reply

Exit mobile version