தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் ‘சரக்கு’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், “கையில் ஒரு மாலையுடன் வந்து சற்றும் எதிர்பாராதவிதமாக தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனைக் கண்டு தொகுப்பாளினி கடும் கோபமடைந்தார். ‘எல்லோருக்கும் மாலை போட்டிங்க நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்பவருக்கு மாலை போட்டோமா?” என அவர் பேசினார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த மன்சூர் அலிகானிடம் பத்திரிகையாளர்கள் ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறி, கூல் சுரேஷையும் மன்னிப்பு கேட்க சொன்னார்.
தொகுப்பாளினிக்கு மாலை போட்ட கூல் சுரேஷ் இதைத்தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ் இந்நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து நானும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்தோம் என கூற, அந்த தொகுப்பாளினி ‘நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என பதில் கொடுத்தார்.
தொடர்ந்து தான் தெரியாமல் அப்படி செய்துவிட்டதாகவும், மன்னிச்சுக்கோ தங்கச்சி’ என மன்னிப்பு கேட்டார். கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
This is not promotion , but public harassment !#CoolSureshpic.twitter.com/oZKk6VEtJ7
— Introvert Boy (@_introvertboy__) September 20, 2023
எதுக்கு எல்லா பட விழாவுக்கும் இந்த அரைவேக்காட்டு தற்குறி கூல் சுரேஷை கூப்பிடுறாங்கன்னு தெரியல… இந்த கோமாளி செய்த இந்த அநாகரீகமான செய்கைக்கு கண்டிப்பாக சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம்…
எதை எங்கே வைக்க வேண்டுமோ அதை அங்கே வைப்பதுதான் சரி… 😡#சரக்கு #mansuralikhan #coolsuresh… pic.twitter.com/Dvbu2lAfs8
— kodanki (@onlykodanki) September 19, 2023