கோட்­டா­பய ராஜபக்ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு வரப் போகி­றாரா? இந்தக் கேள்வி கடந்த வாரம் அர­சியல் வட்­டா­ரங்­களில் பர­வ­லாக காணப்­பட்­டது.

இந்த விட­யத்தை மையப்­ப­டுத்­திய செய்­திகள் பலவும், ஊட­கங்­களில் வெளி­யா­கி­யி­ருந்­தது.

அதற்கு முக்­கி­ய­மான காரணம், மௌபிம ஜனதா கட்­சியின் தலை­வ­ராக தொழி­ல­திபர் திலித் ஜய­வீர பொறுப்­பேற்­றி­ருப்­பது தான்.

திலித் ஜய­வீர

அச்சு, இலத்­தி­ர­னியல் ஊடக நிறு­வ­னங்­களைச் சொந்­த­மாக கொண்ட, திலித் ஜய­வீர அர­சி­ய­லுக்கு வரப் போகிறார் என்­பது புதிய தகவல் அல்ல. அதற்­கான முன்­னேற்­பா­டு­களை அவர் பல கால­மா­கவே மேற்­கொண்டு வந்தார்.

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­னோ­டி­யாக, அவர் கடந்த ஏப்ரல் மாதம், யாழ்ப்­பா­ணத்தில் பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்­தி­ருந்தார்.

இப்­போது அவர், ஹேம­கு­மார நாண­யக்­கா­ரவின் தலை­மையில் இருந்த மௌபிம ஜனதா கட்­சியின் உரி­மையை வாங்கி, அதன் தலை­வ­ராக தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ளார்.

திலித் ஜய­வீர, கோட்­டா­பய ராஜபக்ஷவின் நெருங்­கிய சகாக்­களில் ஒரு­வ­ராக இருந்­தவர்.

கோட்­டா­பய ராஜபக் ஷ, 2019 ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­னரே, தன்னை முன்­னி­லைப்­ப­டுத்தக் கூடிய துறைசார் நிபு­ணர்­களை உள்­ள­டக்­கிய ‘வியத்­மக’ மற்றும் ‘எலிய’ போன்ற அமைப்­பு­களை நிறு­வி­யி­ருந்தார். திலித் ஜய­வீ­ரவும், வியத்­ம­கவில் முக்­கிய பங்­காற்­றிய ஒருவர்.

அவர் 2019 ஜனா­தி­பதி தேர்­தலில் கோட்­டா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்குத் துணை நின்­ற­துடன், அவர் ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்ற பின்னர் எடுத்த பல முடி­வு­க­ளுக்குப் பின்­னாலும் இருந்­தவர்.

அவ்­வா­றான ஒருவர், மௌபிம ஜனதா கட்­சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்­டுள்­ளதை அர­சியல் வட்­டா­ரங்கள் சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்­ள­வில்லை.

திலித் ஜய­வீ­ரவின் அர­சியல் நுழை­வுக்குப் பின்னால், முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக்ஷ இருக்­கலாம் என்ற கருத்து பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது.

திலித் ஜய­வீர பண­பலம் கொண்­டவர். அது அர­சி­ய­லுக்கு முக்­கி­ய­மா­னது. ஆனால், வெறும் பண­ப­லத்தைக் கொண்டு மாத்­திரம் அர­சி­யலில் வெற்றி பெற்று விட முடி­யாது.

ஹெட்­டி­கொட குழு­மத்தின் தலை­வ­ராக இருந்த விக்டர் ஹெட்­டி­கொட, 2005 ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டார். அவரால் வெற்­றி­பெற முடி­ய­வில்லை.

திலித் ஜய­வீ­ரவைப் போலவே, தனக்­கென ஊடக கட்­ட­மைப்­பையும் உரு­வாக்கி அர­சி­யலில் நிலை­பெறும் இலக்­குடன் முன்­னே­றி­யவர் இலங்­கையின் பெரும் பணக்­காரர் என்று அறி­யப்­பட்ட உபாலி விஜே­வ­ரத்­தன.

அவர் நிதி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில், விமான விபத்து ஒன்றில் காணாமல் போனார்.

அவர் உயி­ருடன் இருந்­தி­ருந்தால், 1988 ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருக்­கவும் கூடும்.

திலித் ஜய­வீ­ரவைப் பொறுத்­த­வ­ரையில், பண­பலம், ஊடக பலம் ஆகி­ய­வற்­றுடன் அர­சி­யலில் வெற்றி பெறலாம் என்று எதிர்­பார்க்­க­வில்லை.

அவர், கோட்­டா­பய ராஜபக் ஷவுக்கு பின்னால் உள்ள ஆத­ரவுப் புலத்­தையும், ராஜபக் ஷவி­ன­ருக்கு எதி­ராக உள்ள அலை­யையும் பயன்­ப­டுத்த முனை­கிறார்.

திலித் ஜய­வீர, கோட்­டா­வுக்கு நெருக்­க­மா­னவர் என்ற போதிலும் ராஜபக் ஷவி­னரை கடு­மை­யாக விமர்­சிப்­பவர்.

இங்கு தான் அவர் நுணுக்­க­மான அர­சி­யலை முன்­னெ­டுக்­கிறார். கோட்­டா­பய ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்த போது அமைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி செய­ல­ணி­களில், திலித் ஜய­வீ­ரவும் அங்கம் வகித்­தி­ருந்தார்.

அவர் கோட்­டா­பய ராஜபக் ஷ உரு­வாக்­கிய வியத்­ம­கவைப் போலவே, தனக்கு ஆத­ரவு அளிக்க கூடிய துறைசார் நிபு­ணர்­களின் அணி­யொன்றை உரு­வாக்கி வரு­கிறார்.

அவர்­க­ளுடன் தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­து­கிறார். அவர்­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­கிறார்.   இதன் மூலம் நிபு­ணத்­துவ அர­சி­யலை முன்­னெ­டுக்­கலாம் என்று திலித் ஜய­வீ­ரவும் நம்­பு­கிறார்.

ஆனால், நிபு­ணத்­துவ ஆலோ­சனை என்­பது அர­சி­ய­லுக்குத் தேவையே தவிர, நிபு­ணத்­துவ அர­சியல் நடை­மு­றையில் சிக்­க­லா­னது.

ஜன­வ­சிய அர­சியல் தான் முக்­கி­ய­மா­னது, முதன்­மை­யா­னது. கோட்­டா­பய ராஜபக் ஷ நிபு­ணத்­துவ அர­சி­யலை முன்­னெ­டுக்க முயன்­றாலும், ஈஸ்டர் தாக்­குதல் விளைவும், புலி­களைத் தோற்­க­டித்­தவர் என்ற ஹீரோ அந்­தஸ்தும், அவ­ருக்கு ஜன­வ­சி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

அந்த அர­சியல் தான் அவ­ரது பிர­மாண்ட வெற்­றிக்கு கார­ண­மாக அமைந்­தது. தேர்தல் வெற்­றிக்குப் பின்னர் நிபு­ணத்­துவ ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொண்ட விட­யத்­திலும் கோட்டா தவ­றி­ழைத்தார்.

தவ­றான ஆலோ­ச­னை­களை நம்­பினார், அதன் வழி முடி­வு ­களை எடுத்தார். அதனால் அவரால் இடை­ந­டு­வி­லேயே பத­வியை விட்டு ஓடும் நிலை ஏற்­பட்­டது.

கோட்­டா­பய ராஜபக் ஷவுக்கு ஏற்­பட்ட அந்த நிலையை ஏற்றுக் கொள்­ளவோ, நிரா­க­ரிக்­கவோ முடி­யாத நிலைக்கு உள்­ளா­கி­யி­ருந்­தவர் திலித் ஜய­வீர.

கடந்த ஆண்டு அவர் ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கி­யி­ருந்த செவ்­வியில், கோட்­டா­பய ராஜபக் ஷவை அழித்­தது ராஜபக் ஷவி­னரே என்று குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

மஹிந்த, பசில், நாமல் உள்­ளிட்ட ராஜபக் ஷ குடும்­பத்­தினர், கோட்­டாவின் மீது அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தனர் என்றும், அவரை சுயா­தீ­ன­மாக இயங்­க­வி­ட­வில்லை என்றும், அந்தச் செவ்­வியில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதே­வேளை, கோட்­டா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்கு துணை­யாக இருந்த திலித் ஜய­வீர, அவர் மீது விமர்­ச­னங்­களை முன்­வைக்­கவும் தவ­ற­வி­லலை.

மக்­களின் ஆணையைப் புறம்­தள்­ளினார் என்றும், நன்­றிக்­கடன் கார­ண­மாக அவரால் குடும்­பத்­தி­னரின் சொல்லை மீறி ஆக்­க­பூர்­வ­மாக செயற்­பட முடி­ய­வில்லை என்றும் குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

ஆனால், ராஜபக் ஷவி­னரோ, திலித் ஜய­வீர மீது குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தனர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

ஜனா­தி­பதி செய­ல­ணி­களில் அங்கம் வகித்த சில ஊட­கங்­களின் பிர­தா­னி­களே, சேதனப் பசளை திட்டம் குறித்து கோட்­டா­பய ராஜபக் ஷவுக்கு தவ­றான ஆலோ­ச­னை­களை வழங்­கினர் என்று சசீந்­திர ராஜபக் ஷ குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

இந்தக் குற்­றச்­சாட்டு, கோட்­டா­பய ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்த போதே முன்­வைக்­கப்­பட்­டது என்­பதும் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டி­யது.

கோட்­டாவின் சகா­வாக அறி­யப்­பட்ட – அதே­வேளை, ராஜபக் ஷ குடும்­பத்­தி­னரால் விமர்­சிக்­கப்­பட்ட அல்­லது வெறுக்­கப்­பட்ட திலித் ஜய­வீர, அர­சி­ய­லுக்கு வந்­தி­ருப்­பதை ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு கண்­ணோட்­டத்­துடன் பார்க்­கின்­றனர்.

ஒரு தரப்­பினர் அவர் கோட்­டாவின் பதி­லி­யாக அர­சி­யலில் கள­மி­றங்­கு­கிறார் என்று கரு­து­கின்­றனர். கோட்­டாவை மீண்டும் அர­சி­ய­லுக்கு கொண்டு வரும் நோக்கம் அவ­ருக்கு இருப்­ப­தாக அவர்கள் அனு­மா­னிக்­கி­றார்கள்.

இன்­னொரு தரப்­பினர், ராஜபக் ஷவி­னரின் வெற்­றியை பாதிக்கும் உத்­தி­யாக அவர் அர­சி­ய­லுக்கு வரு­வ­தாக கரு­து­கின்­றனர். ராஜபக் ஷவி­னரின் வாக்கு வங்­கியில் இருந்து கோட்­டா­வுக்கு ஆத­ர­வான வாக்­கு­களை பிரித்­தெ­டுப்­பது இவ­ரது நோக்கம் என அவர்கள் ஊகிக்­கி­றார்கள்.

மற்­றொரு தரப்­பினர், ராஜபக்ஷவி­னரை வீழ்த்­து­வ­தற்கு, அவர்­களின் வாக்கு வங்­கியை உடைப்­ப­தற்கு திலித் ஜய­வீ­ரவை ஒரு தரப்­பினர் பயன்­ப­டுத்­து­கின்­ற­னரோ என்று சந்­தே­கிக்­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும், திலித் ஜய­வீ­ரவின் அர­சியல் நுழைவைப் பற்றி பொது­ஜன பெர­மு­னவின் தரப்பில் இருந்து கருத்து வெளி­யி­டப்­ப­டா­வி­டினும், கோட்­டாவின் மீள் அர­சியல் பிர­வே­சத்தை அவர்கள் விரும்­ப­வில்லை என்­பது வெளிப்­ப­டை­யாக உள்­ளது.

பொது­ஜன பெர­மு­ன­வினர் ராஜபக்ஷ விசு­வா­சி­க­ளாக இருந்­தாலும் அவர்கள் பெரும்­பாலும் மஹிந்­தவின் விசு­வா­சி­க­ளா­கவே இருக்­கி­றார்கள்.

கோட்டா மீண்டும் அர­சி­ய­லுக்கு வரு­வது கேலிக்­கூத்து என்று விமர்­சித்­தி­ருக்­கிறார் எஸ்.எம்.சந்­தி­ர­சேன. இதுதான் ராஜபக்ஷவி­ன­ரதும், மொட்டு கட்­சி­யி­னதும் நிலைப்­பாடு.

கோட்­டா­வுக்கு கிடைத்த 69 இலட்சம் வாக்­குகள் அவ­ருக்­கான ஆணை அல்ல, அது மஹிந்­த­வுக்­காக அளிக்­கப்­பட்ட வாக்­குகள் என்று குறிப்­பிட்­டி­ருந்தார் எஸ்.எம்.சந்திரசேன.

இதன் மூலம் கோட்டாவின் அரசியல் வருகையை ராஜபக் ஷ குடும்பத்தினரோ- பொதுஜன பெரமுனவினரோ விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அவ்வாறு அவர் மீண்டும் உள்ளே வந்தால் தங்களின் வாக்கு வங்கி உடையும் என்ற அச்சம் அதற்கு காரணமாக இருக்கலாம். அவ்வாறான பயத்தை ராஜபக்ஷவினருக்கு ஏற்படுத்துவது கூட எதிர்க்கட்சியினரின் வியூகமாக இருக்க கூடும்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், கோட்டாவை முன்னிலைப்படுத்திக் கொண்டு, திலித் ஜயவீரவினால் அரசியலில் நிலைபெற முடியாது. அவர் கோட்டாவைப் பயன்படுத்த முயன்றால், அது அவருக்கே ஆபத்தாக முடியும். அதேவேளை, கோட்டா அவரைப் பயன்படுத்த முயன்றால், அது ராஜபக்ஷ குடும்பத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த இடத்தில் திலித் ஜயவீர, எந்த நிலைப்பாட்டில் முன்னகரப் போகிறார் என்பதைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

-சத்ரியன்

Share.
Leave A Reply

Exit mobile version