தற்­போது ஜெனி­வாவில் இடம்­பெற்று வரும், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் 54ஆவது கூட்­டத்­தொ­டரில், இலங்கை நில­வ­ரங்கள் மற்றும் முன்­னேற்­றங்கள் தொடர்­பான, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் வோல்கர் டர்க்கின் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

கடந்த 11ஆம் திகதி இந்த அறிக்­கையை ஐ.நா மனித உரி­மைகள் பிரதி ஆணை­யாளர் நடா அல்– நசீவ் பேர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்தார்.

அதை­ய­டுத்து நடந்த ஊடாடல் கலந்­து­ரை­யா­டலில், உரை­யாற்­றிய இலங்கைப் பிர­தி­ நிதி ஹிமாலி அரு­ண­தி­லக, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் அறிக்­கையை நிரா­க­ரித்து, அதன் பரிந்­து­ரை­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென அறி­வித்­தி­ருக்­கிறார்.

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் 51/1 தீர்­மா­னத்­துக்கு இணங்க, 16 பக்­கங்­களைக் கொண்ட இந்த எழுத்­து­மூல அறிக்கை, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாய­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு முன்­னைய அறிக்­கை­களில் வலி­யு­றுத்­தப்­ப­டாத ஓரிரு விட­யங்கள் இந்த அறிக்­கையில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

அந்த விட­யங்­களில், மிக முக்­கி­ய­மா­னது, பாது­காப்­புத்­துறை மறு­சீ­ர­மைப்பு பற்­றி­ய­தாகும்.

“இரா­ணுவச் செல­வி­னங்­களைக் கணி­ச­மாகக் குறைத்தல், ஆய்வு செய்தல் மற்றும் ஆயுத மோதலால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் இரா­ணுவப் பிர­சன்­னத்தைக் குறைத்தல் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய, விரி­வான பாது­காப்புத் துறை மறு­சீ­ர­மைப்பை மேற்­கொள்­ளு­மாறு,” ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர், தனது அறிக்­கையில், இலங்கை அர­சுக்­கான பரிந்­து­ரையில் அழைப்பு விடுத்­தி­ருக்­கிறார்.

கடந்த காலங்­களில் ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் அறிக்­கை­களில், இரா­ணுவ மயப்­ப­டுத்தல் என்ற விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்டு வந்­தது.

அர­சாங்­கத்­திலும், வடக்கு, கிழக்­கிலும் இரா­ணுவ மய­மாக்கல் அதி­க­ளவில் இருப்­ப­தாக அதில் குறிப்­பி­டப்­பட்டு வந்­தது.

ஆனால், இந்த அறிக்­கையில், பாது­காப்புத் துறை மறு­சீ­ர­மைப்பு வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருப்­ப­துடன், புதி­தாக ஒரு விடயம் குறித்தும் அழுத்தம் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

பாது­காப்­புத்­துறை மறு­சீ­ர­மைப்பு என்ற விட­யத்தை தனி­யா­ன­தொரு தலைப்பின் கீழ், ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் வலி­யு­றுத்­தி­யி­ருப்­ப­தற்கு சில கார­ணங்கள் இருப்­ப­தாகத் தெரி­கி­றது.

ஒன்று, பாது­காப்பு மறு­சீ­ர­மைப்பு குறித்து அர­சாங்கம் வெளி­யிட்­டுள்ள தக­வல்கள் மற்றும் அளித்­துள்ள வாக்­கு­று­திகள்.

இரண்டு, தொடர்ந்தும் தீவி­ர­மாக இருந்து வரு­கின்ற இரா­ணுவத் தலை­யீ­டுகள், இரா­ணுவ மய­மாக்கல்.

மூன்று, பொறுப்­புக்­கூறல் கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­வ­தற்கு அவ­சி­ய­மான கார­ணி­யாக இருப்­பது.

இது தவிர நான்­கா­வ­தாக, ஒரு காரணம் இருப்­ப­தாக தெரி­கி­றது. அது என்­ன­வென்று, இந்த பத்­தியில் இன்­னொரு பகு­தியில், விப­ரிக்­கப்­படும்.

2023 ஜன­வரி 13ஆம் திகதி, பாது­காப்பு அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கையில், இலங்கை இரா­ணு­வத்தின் தற்­போ­தைய எண்­ணிக்கை 200,800  என்றும் அது,  2024 ஆண்­டுக்குள் 135,000 ஆகவும், 2030 ஆண்­டுக்குள் 100,000 ஆகவும் குறைக்­கப்­படும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

இரா­ணு­வத்தை மேலும் குறைத்து, இரா­ணுவ வரவு– செலவுத் திட்­டத்தை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம், இலங்கை அர­சாங்­கத்தை ஊக்­கு­விப்­ப­தா­கவும்,  அது அண்­மைய ஆண்­டு­களில் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அடிப்­படை மாற்­றங்­களை பிர­தி­ப­லிப்­ப­தா­கவும் அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

அடுத்து, இந்த நட­வ­டிக்­கைகள் ஆழ­மான பாது­காப்புத் துறை மறு­சீ­ர­மைப்­புடன் இருக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ள­துடன், அதற்குள் உள்­ள­டக்­கப்­பட வேண்­டிய விட­யங்­களும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

தீவி­ர­மான மனித உரிமை மீறல் அல்­லது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­களில் தொடர்­பு­டைய, தனி நபர்­களை படையில் இருந்து அகற்றும், படைப்­பி­ரி­வு­களை கலைக்கும் விரி­வான மற்றும் வெளிப்­ப­டை­யான சோதனை முறையை பின்­பற்­று­மாறும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம்.

இது இதற்கு முன்னர் குறிப்­பி­டப்­ப­டாத ஒரு விடயம்.

அதா­வது முன்­னைய அறிக்­கை­களில் தனி­ந­பர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் , அவர்களை  சட்­டத்தின் முன் நிறுத்தவும் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. விசா­ரணை செய்ய பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

ஆனால், குற்­றங்­களில் ஈடு­பட்ட தனி­ந­பர்­களை படையில் இருந்து நீக்­கு­மாறும், படைப்­பி­ரி­வு­களை கலைக்­கு­மாறும் இப்­போது தான் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

முன்­னைய அறிக்­கை­களில், போர்க்­குற்­றங்கள் அல்­லது மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக, 53, 55, 58, 59, 68 ஆவது டிவி­சன்கள் உள்­ளிட்ட பல படைப்­பி­ரி­வுகள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்தப் படைப்­பி­ரி­வு­களில் சில­வற்றில் கட்­டளை அதி­கா­ரி­க­ளாக பணி­யாற்­றி­ய­தற்­கா­கவே, அமெ­ரிக்கா, சில உயர்­மட்ட படை அதி­கா­ரி­க­ளுக்கு விசா வழங்க மறுத்­தது.

இப்­போது, குற்­ற­மி­ழைத்த படைப்­பி­ரி­வு­களை கலைத்து விடு­மாறு வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது ஐ.நா.

ஆனால் அவ்­வாறு கலைக்­கப்­பட வேண்­டிய படைப்­பி­ரி­வுகள் எவை­யென ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம் குறிப்­பி­ட­வில்லை.

தற்­போ­தைய பாது­காப்புத் தேவை­க­ளுக்கு அவ­சி­ய­மற்ற, முன்­னைய மோதல் பகு­தி­களில் இருந்து- இரா­ணுவப் பிர­சன்­னத்தை படிப்­ப­டி­யாக குறைக்­கு­மாறும் அந்த அறிக்­கையில் கோரப்­பட்­டி­ருக்­கி­றது.

பொறுப்­புக்­கூ­றலை நிறை­வேற்­று­வ­தற்கு, குற்­ற­மி­ழைத்­த­வர்கள் மீது, நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது.

தனி­ந­பர்கள் அல்­லது படைப்­பி­ரி­வுகள் அதற்கு பொறுப்­புக்­கூற வேண்டும்.

ஒட்­டு­மொத்த இலங்கை இரா­ணு­வமும் பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் இருப்­ப­தாக  ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் அறிக்கை குறிப்­பி­ட­வில்லை.

குற்­ற­மி­ழைத்த படை­யி­ன­ரையும், படைப்­பி­ரி­வு­க­ளையும் தான் கலைக்­கு­மாறு அதில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

குற்­ற­மி­ழைத்த தனி­ந­பர்­க­ளையே தண்­ட­னையில் இருந்து தப்­பிக்க வைக்கும் அர­சாங்கம், குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டைய படைப்­பி­ரி­வு­களைக் கலைக்கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

ஆனால் இவ்­வா­றா­ன­தொரு பரிந்­துரை, ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யிடம் இருந்து வரும் என்று அர­சாங்கம் எதிர்­பார்த்­தி­ருக்­காது.

ஏனென்றால், அண்­மையில் அமெ­ரிக்க தூதுவர் ஜூலி சங் வடக்­கிற்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த போது, கிளி­நொச்­சியில் உள்ள 1ஆவது கோர்ப்ஸ் படைப்­பி­ரிவின் தலை­மை­ய­கத்­துக்குச் சென்று, அதன் கட்­டளைத் தள­ப­தியை சந்­தித்­தி­ருந்தார்.

அதன் போது, இரா­ணுவ மறு­சீ­ர­மைப்புத் திட்­டங்கள் குறித்தும், இரா­ணு­வத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவைப்­படும் உத­விகள் குறித்தும் அவர் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

அந்த தகவல் வெளி­யான போது அர­சியல் வட்­டா­ரங்­களில் அது ஆச்­ச­ரி­ய­மாக பார்க்­கப்­பட்­டது.

ஏனென்றால், இலங்கை இரா­ணுவம் போர்க்­கா­லத்தில் மீறல்­களில் ஈடு­பட்­ட­தென்றும், குற்­ற­மி­ழைத்­த­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும்- தொடர்ச்­சி­யாக அழுத்தம் கொடுத்து வந்­தது அமெ­ரிக்கா.

பொறுப்­புக்­கூறல் கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­மாறு அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், குற்­றம்­சாட்­டப்­பட்ட படை அதி­கா­ரிகள் பல­ருக்கு தடை விதித்­தது. குறிப்­பிட்ட படைப்­பி­ரி­வு­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு விசா மறுக்கப்பட்டது.

இலங்கை இரா­ணு­வத்­துடன், மனி­தா­பி­மான விட­யங்கள் தவிர, ஏனைய பயிற்சி மற்றும் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் மட்­டுப்­ப­டுத்­தி­யது.

கடற்­படை, விமா­னப்­ப­டை­யுடன் உற­வு­களை பேணி வந்­தாலும், இரா­ணு­வத்­துடன் உற­வு­களை தவிர்த்து வந்­தது.

இது பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான அமெ­ரிக்­காவின் அழுத்­த­மா­கவே பார்க்­கப்­பட்­டது.

இவ்­வா­றான நிலையில், அமெ­ரிக்க தூதுவர் ஜூலி சங் கிளி­நொச்­சிக்குச் சென்று 1ஆவது கோர்ப்ஸ் படைப்­பி­ரி­வுடன் கலந்­து­ரை­யா­டி­யது ஆச்­ச­ரி­யத்­தையே கொடுத்­தது.

எனினும், 1ஆவது கோர்ப்ஸ் போர்க்­கா­லத்­துக்குப் பின்­னரே உரு­வாக்­கப்­பட்­டது.

ஆயினும், அதில் இடம்­பெற்­றுள்ள 53, 58 ஆவது டிவி­சன்­களும், விசேட படைப்­பி­ரிவு மற்றும் கொமாண்டோ படைப்­பி­ரிவும், போர்க்­கா­லத்தில் இடம்­பெற்ற மீறல்­க­ளுடன் அதிகம் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தாக குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தவை.

அவ்­வா­றான படைப்­பி­ரி­வுடன் அமெ­ரிக்க தொடர்­பு­களை ஏற்­ப­டுத்த – பலப்­ப­டுத்த முயன்­றமை கூட, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் அறிக்­கையில், பாது­காப்பு மறு­சீ­ர­மைப்பு விவ­காரம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக இருக்­கலாம்.

அது தான் ஏற்­க­னவே குறிப்­பிட்­டி­ருந்த நான்­கா­வது காரணம்.

அதே­வேளை, குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கிய நபர்­க­ளையும், படைப்­பி­ரி­வு­க­ளையும் கலைப்­பதன் மூலம், இலங்கை இரா­ணு­வத்­துக்கு வெள்­ளை­ய­டிக்கும் வேலையை ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணியகம் பார்க்கிறதா என்ற விமர்சனங்கள் எழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

கடந்த ஒரு தசாப்தமாக, குற்றமிழைத்த படையினர் மீது நடவடிக்கைகளை எடுக்கும் விடயத்தில், ஐ.நாவின் ஒட்டுமொத்த முயற்சிகளும், தோல்வியையே சந்தித்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில், தண்ணீரில் இருந்து மீனை பிரித்து தரையில் போட்டு விட்டால், அதனை சுலபமாக சாகடித்து விடலாம் என்று ஐ.நா கணக்குப் போடக் கூடும். ஆனால், அரசாங்கத்தின் நிழலில் இருக்கும் வரையில் தான், இலங்கையில் போர்க்குற்றவாளிகளுக்கு பாதுகாப்புக் கிடைக்கும். என்று ஐ.நா தவறாக கணக்குப் போடுகிறது.

தண்டனையில் இருந்து தப்பித்தலும், தப்பிப்பதற்கு ஒத்துழைப்பதும் இலங்கையில் ஊறிப்போன அரசியல் கலாசாரம்.  ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தாலும் சரி இல்லாது போனாலும் சரி, தவறிழைத்தவர்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.

அந்த நிலை மாற்றியமைக்கப்படாத வரையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எத்தனை அறிக்கைகளை சமர்ப்பித்தாலும், அது குளத்தில் வீசிய கல்லாக ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டு, அமைதியாக இருக்குமே தவிர, வேறெந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது.

-சுபத்ரா

Share.
Leave A Reply

Exit mobile version