உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மதம் இஸ்லாம்

இன்று உலகில் பல மதங்கள், நம்பிக்கைகளை பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சிலர் தங்களை மத நம்பிகை அற்றவர்களாக கூறிக்கொண்டும் வாழ்கின்றனர்.

ஒரு நாடு என்று இருந்தால் அதில் பல தரப்பு மக்கள் வாழ்கின்றனர். உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மதம் இஸ்லாம்.

இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

உலகின் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் இடம் மத்திய கிழக்கு ஆசியாவகும். இவர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சவுதி அரேபியா தொடங்கி ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான் என பல நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

அப்படி உலகின் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர்கள் பரவி வாழும் நிலையில், ஒரு இஸ்லாமியர்கள் கூட வாழாத நாடு ஒன்று உலகில் உள்ளது.

அது எது தெரியுமா. அது தான் உலகிலேயே மிகச் சிறிய நடான வாடிகன் சிட்டி. ஐரோப்பிய நாடான வாட்டிகன் சிட்டி உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது. இங்கு தான் அவர்களின் மத குருவான போப் ஆண்டவர் வசித்து ஆட்சி செய்கிறார்.

இதையும் படிங்க: எவரெஸ்ட் சிகரத்தில் இப்படி ஒரு மர்மமா? இரவு நேரத்தில் கேட்கும் விநோத ஒலி.. காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

vatikan

உலகின் மிக அழகான சிறிய புகழ்பெற்ற நாடான வாட்டிகன் சிட்டியில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை. இது இத்தாலியின் ரோம் பகுதிக்குள் அமைந்துள்ளது.

இந்த நாட்டிற்கு சொந்த ராணுவமும் கூட இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வாட்டிகன் நகரத்தைப் பாதுகாக்க சுவிஸ் மிஷனரிகள் போப்களால் நியமிக்கப்பட்டனர்.

அன்றில் இருந்து இத்தாலிய ராணுவ உதவியுடன் சுவிஸ் காவலர்கள் தான் வாட்டிகன் சிட்டியை பாதுகாக்கின்றனர்.

2019 புள்ளி விவரப்படி இந்நாட்டின் மக்கள் தொகை 453 மட்டுமே. அத்துடன் சிலர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை 372 ஆகும்.

Share.
Leave A Reply

Exit mobile version