பொரளை பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த அங்காடியில் கடமையாற்றும் ஐவர் சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

ஹன்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் செப்டம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பொரளையிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தமது ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த பல்பொருள் அங்காடி நிர்வாகம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version