சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version