உலக வரலாற்றில் ஒவ்வொரு உலகத்தலைவரும் தங்களின் பெயரை தங்களின் தனித்துவமான நடவடிக்கைகளால் இடம் பெற செய்துள்ளனர்.

அந்த வகையில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ஃப் ஹிட்லர் தன்னுடைய போர் வெறியாலும், மனித குல விரோத நடவடிக்கைகளாலும் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளார்.

ஹிட்லரின் கொடூரமான ஆட்சி முறை மற்றும் போர் தந்திரங்களை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எந்த தகவலும் தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை.

ஹிட்லர் செய்த காரியங்களின் விளைவு அளவிட முடியாதது மற்றும் அவரால் ஏற்பட்ட சேதங்கள் ஈடுசெய்ய முடியாதது.

அடால்ஃப் ஹிட்லரின் அரசியல் வாழ்க்கையைப் போலவே அவரின் காதல் வாழ்க்கையும் பல புதிர்கள் நிறைந்ததாகவே இருந்தது.

ஹிட்லரின் வாழ்க்கையில் மொத்தம் மூன்று பெண்கள் இருந்தனர். அவரது வாழ்க்கையில் நுழைந்த மூன்று பெண்களும் தற்கொலைக்கு முயன்றனர்,

இது அவரது உளவியல் மற்றும் பாலியல் பண்புகளின் மீது தீவிரமான அச்சத்தை ஏற்படுத்தியது.

ஈவா பிரவுன் (Eva Braun )

ஹிட்லரின் வாழ்க்கையில் இருந்த மூன்று பெண்களில் மிகவும் சுவாரஸ்யமான உறவு எதுவெனில், அது அவரை விட 23 வயது இளைய ஈவா பிரவுனுடன் இருந்த உறவுதான்.

ஈவா பிரவுன் 12 ஆண்டுகள் ஹிட்லரின் உதவியாளராகவும், 40 மணிநேரம் மனைவியாகவும் இருந்தார்.

ஈவா பிரவுன் உலகின் அனைத்து வரலாற்றாசிரியர்களையும், உலகையும் குழப்பிய பெண். உலகே பார்த்து நடுங்கிய ஒருவரை ஒரு பெண் எப்படி காதலிப்பார் என்று அனைவரும் சிந்தித்தனர்.

அவர்களின் காதல் கதை 1929 இல் அப்போது 40 வயதான அடால்ஃப் வைத்திருந்த ஓபரா டிக்கெட்டில் தொடங்கியது. அவர்களின் முதல் சந்திப்பு முனிச்சில் தொடங்கியது. ஈவாவுக்கு அப்போது வெறும் 17 வயதுதான்.

ஹிட்லரின் ரகசிய காதல்

ஹிட்லர் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை எப்படி நடத்தினார் என்பது மர்மமாகவே உள்ளது. பொதுவெளியில் இருக்கும்போது, அவர் புகைப்படங்களைக்கூட அனுமதிக்காமல், ஈவாவை மறைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

தேசத்தின் மீதுள்ள அன்பைத் தவிர தனக்கு வேறு அன்பும் இருப்பதாக மக்கள் நினைப்பதை அவர் விரும்பவில்லை.

ஹிட்லருடன் இருப்பதற்காக அவர் தனது வேலையை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது, ஆனால் திருமணம் ஒருபோதும் அதிகாரபூர்வமாக நடக்கவில்லை.

அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் வதந்திகள் பரவின. ஹிட்லரின் தனிப்பட்ட ஓட்டுநர் ஈவாவை “ஜெர்மனியின் மகிழ்ச்சியற்ற பெண்” என்று அழைத்தார்.

ஈவாவின் கடிதம்

1931 இல், ஈவா ஹிட்லருக்கு ஒரு கடிதம் எழுதினார்: “அன்புள்ள திரு ஹிட்லரே, தியேட்டரில் இனிமையான மாலைப் பொழுதைக் கழித்ததற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

அது மறக்க முடியாதது… நாம் மீண்டும் சந்திக்கும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் …” என்று எழுதியிருந்தார்.

அவர்களின் ஈர்ப்பு உடனடியாக இருந்தது, மேலும் ஈவாவின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, அவர் ஹிட்லருடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஆனால் புகைப்பிடித்தல், நிர்வாணக் குளியல் போன்ற ஹிட்லர் வெறுத்த விஷயங்களை அவர் தொடர்ந்து செய்தார்.

காதல் கதையின் முடிவு

1945-ல் அவர்களின் காதல் கதைக்கு முடிவுரை எழுதப்பட்டது. போரில் தோல்விக்கு பின் ஹிட்லரும் அவரது சில பணியாளர்களும் பெர்லினில் இருந்த பதுங்கு குழிக்குள் இருந்தனர்.

ரஷ்யாவின் சிவப்பு ஆர்மி ஹிட்லரின் தலைமையகத்தை மூடுவதால் நாஜிக்கள் நேச நாடுகளால் வெளியேற்றப்படவிருந்தனர்.

ஈவாவும் ப்ரவுனும் அந்த பதுங்கு குழியில் இருந்தார். உலகையே அச்சுறுத்திய பாசிசத் தலைவருக்கு தோல்வியும் மரணமும் நிச்சயமானது என்று தெரிந்த போதும், அவர் அங்கேயே இருக்க முடிவு செய்தார்.

“மிஸ் பிரவுன், என் நாய் ப்ளாண்டியைத் தவிர, நான் முற்றிலும் நம்பக்கூடிய ஒரே ஆள் அவர் மட்டுமே” என்பது ஹிட்லரின் கடைசி நிமிட வார்த்தைகள்,

அவர் அவ்வாறு கூறியதில் தவறில்லை. ஈவா ஹிட்லருடன் இறக்கத் தயாராக இருந்தார். அவர் கேட்டதெல்லாம், ஹிட்லரின் மனைவியாக வேண்டும் என்பதுதான்.

அன்று அவரின் ஆசை நிறைவேறியது. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி அவர்களின் திருணம் நடத்தப்பட்டது.

ஈவாவின் பல வருட விசுவாசத்திற்கான வெகுமதி அவர்களின் திருமணம். சான்றிதழில் கையொப்பமிட அவர் குனிந்து, Eva Braun என்று எழுத இருந்தார்,

ஆனால் ‘B’ எழுத்தை அழித்து விட்டு, அதற்கு பதிலாக ஹிட்லர் என்று எழுதினார். அடுத்த நாள் மதிய உணவுக்குப் பின், மாலை 3 மணியளவில், அவரது மனைவியும், அவரும் தனியறைக்கு சென்றனர்.

ஈவா சயனைடு மாத்திரையை கடித்தார், ஹிட்லரும் அவ்வாறே செய்தார். மேலும் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.

ஏப்ரல் 30, 1945. ஈவா பிரவுன் ஹிட்லர் பதுங்கு குழியில் வசிப்பவர்களால் ஒரு சோபாவில் அவரது புதிய கணவரான ஹிட்லருடன் காணப்பட்டார்.

அவர் தூங்குவது போலவே தலை அவரின் தோள்களில் சாய்ந்து இருந்தது. ஹிட்லரின் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஒரு கைத்துப்பாக்கி தரையில் கிடந்தது. அவர்கள் இருவரும் தம்பதிகளாக உலகை விட்டு பிரிந்தனர்.

தொடர்புடைய செகய்தி :172 photos adolf hitler eva braun

Share.
Leave A Reply

Exit mobile version