சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி உடைந்து உள்ளது. நேற்று அதிமுக ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கூட்டணி உடைக்கப்பட்டது.

இந்த கூட்டணி முறிவு தொடர்பாக பல்வேறு விவாதங்கள், ஆலோசனைகள் ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த கூட்டணி முறிவு ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக எடுத்த துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது.

இந்த முடிவை எடப்பாடி பழனிச்சாமி அவ்வளவு சாதாரணமாக எட்டிவிடவில்லை. இந்த முடிவை எடுக்கும் முன் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

அவர் வரிசையாக பின்வருமாறு.

 

1. அதிமுக தலைவர்களை அண்ணாமலை விமர்சனம் செய்ததுதான் மோதலுக்கு காரணம்.

இது அண்ணா, ஜெயலலிதா பற்றிய விமர்சனம் இல்லை. ஜெயலலிதாவை ஏற்கனவே அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

அப்போதெல்லாம் கூட்டணி முறியவில்லை. ஆனால் இப்போது சிவி சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜு போன்றவர்களை அண்ணாமலை தாக்கியதுதான் மோதலுக்கு முதல் காரணம்.

2. இந்த மோதலை சமாதானப்படுத்த இரண்டு பக்கமும் முயன்று உள்ளனர். ஆனால் சமாதான பறவைகள் எதுவும் வெற்றிபெறவில்லை.

3. டெல்லி தரப்பில் இருந்தும் இரண்டு பக்கமும் சமாதானங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் அதுவும் வெற்றிபெறவில்லை.

4. ஒரு கட்டத்திற்கு மேல் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. சி வி சண்முகம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் ஜே பி நட்டா, பியூஸ் கோயல் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து இதை பற்றி பேசி இருக்கிறார்கள்.

ஆனால் அண்ணாமலையை எல்லாம் மாற்ற முடியாது. எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிடாதீர்கள் என்று டெல்லி மூக்கை உடைத்து உள்ளது.

5. அதற்கு முன்பே அமித் ஷாவுடன் எடப்பாடி நடத்திய சந்திப்பில்.. 20 இடங்கள் வேண்டும் . தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து உள்ளது என்றெல்லாம் அமித் ஷா கேட்டுள்ளார்.

அப்போதே 20 இடங்கள் கொடுக்கவே முடியாது என்று எடப்பாடி கூறி உள்ளார். இதுவும் கூட்டணி முறிய மிக முக்கியமான காரணமாகி உள்ளது .

மோதல்: ஒரு பக்கம் அண்ணாமலை பேச்சு.. இன்னொரு பக்கம் டெல்லியின் நடவடிக்கைகள்.. கடைசியாக கூட்டணி இடஒதுக்கீடு மோதல் இது எல்லாம் சேர்ந்துதான் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறிக்கும் முடிவை எடுக்க வைத்துள்ளது எடப்பாடியை.

கூட்டணி முறிந்த நேரம்: 1. நேற்று அதிமுக கூட்டம் நடக்கும் முன்பே எடப்பாடிக்கு கூட்டணி குறித்து தனியாக முடிவு எடுக்கும் அதிகாரம் கொடுக்க தீர்மானம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது.

அவர்தான் பொதுச்செயலாளர் என்றாலும்.. சம்பிரதாயமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து தனியாக முடிவு எடுக்கும் அதிகாரம் கொடுக்க தீர்மானம் கொண்டு வருவது வழக்கம். அப்படிதான் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டது.

2. எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு வந்தவுடன் சரியாக 4.20 மணிக்கு ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலையை வணங்கி மரியாதை செய்துள்ளார்.

3. எடப்பாடி பழனிச்சாமி அதன்பின் உள்ளே சென்று.. கீழ் மாடியில் சீனியர்களை இருக்கும் படியும்,

மேல் மாடியில் ஜூனியர்களை வர சொல்லியும் அழைத்து சென்றுள்ளார். 4. எல்லோரின் போனும் வெளியே வைக்கப்பட்ட நிலையில், மேல் மாடியில் கூட்டணி முறிவை ஏற்கும் ஆட்களை கை தூக்கி சொல்லி உள்ளார்.

எல்லோருமே இதற்கு கை தூக்கி உள்ளனர். 5. அதன்பின் கீழ் மாடியில் சீனியர்களிடம் இதே கேள்வியை கேட்டுள்ளார்.

3-4 பேரை தவிர மற்றவர்கள் கூட்டணியை உடைக்க ஏற்றுக்கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து சில நிமிடம் அவர்களிடம் கூட்டணி முறிவின் சாதகம், பாதகம் பற்றி பேசி உள்ளார்.

பின்னர் சீனியர், ஜூனியர் எல்லோரையும் ஒன்றாக சரியாக அழைத்து 4.45 மணிக்கு தன் முடிவை கூறி உள்ளார். அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்பே கூட்டணி முறிவை பற்றிய அறிக்கை அவசர அவசரமாக “பிழைகளுடன்” அடிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version