•நமது நாட்டில இருந்து தற்பொழுது  ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வங்கி முகாமையாளர்கள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள், வசதிபடைத்தவர்கள், ஏழைகள்… என எல்லோருமே கனடாவுக்கு பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் நீதிபதிகளும் கனடாவுக்கு போக வெளிகிட்டார்கள். கனடாவுக்கு போவதற்கு எல்லொருக்கும் ஒரு காரணம் இருக்கும்.

அதே போன்று முல்லைதீவு நீதிபதி ரீ.சரவணராஜா அச்சுறுத்தல் காரணமா நாட்டைவிட்டு போகிறாராம்.  இது நம்ப கூடிய கதையா?

உண்மையான நீதிபதி என்றால்  எந்த  சாவால்கள் வந்தாலும் அதை  எதிர்கொண்டு நீதிபதி நீதியை நிலைநாட்டவேண்டும். அதைவிட்டு நாட்டைவிட்டு ஓடுவதா?

முன்னாள் தலைமை நீதிபதி ஷிரானி பண்டார நாயக்காவுக்கு வராத அச்சுறுத்தலா? இளம்செழியனுக்கு வராத  அச்சுறுத்தலா?  அவர்கள் நாட்டைவிட்டா ஓடிவிட்டார்கள்.

குற்றவாளிகளுக்கு எதிராக தீாப்பு வழங்குகின்ற  எல்லா நீதிபதிகளுக்கு எதிரிகளால் அச்சுறுத்தல் உண்டு. அதற்காக பயந்து நீதிபதி தொழிலை யாராவது இதுவரை ராஜினாமா செய்துள்ளார்களா??

……………………………………………………………………………………………………………..

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு,

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும்  பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்  பாராளுமன்றத்திலும், பாராளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்தனர்.

சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் 21.09.2023ம் திகதி அன்று சந்திக்க  வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.

இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version