இலங்கையில் அரகலய நாட்களில் ஆர்ப்பாட்டங்களின் வீடியோக்களை வெளியிட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் இலங்கையின் ஒடுக்குமுறை அரசாங்கத்திடமிருந்து 13 மாதங்கள் மறைந்திருந்துள்ள நிலையில் தனக்கு நம்பிக்கைகள் குறைவடையத்தொடங்கிவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த கெய்லே பிரேசர் என்ற பெண்ணே இதனை தெரிவித்துள்ளார்

கடந்த வருடம் இலங்கையில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற குடிவரவுதுறை அதிகாரிகள் அவரின் கடவுச்சீட்டை பறித்து சென்றனர்.

அந்த பெண் செல்லுபடியற்ற விசாவில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்த குடிவரவுதுறை அதிகாரிகள் அவரின் கடவுச்சீட்டை பறித்து சென்றுள்ளனர்.

எனினும் தான் அரகலயவீடியோக்களை வெளியிட தொடங்கிய பின்னரே இது குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டதாக இலங்கைக்கு ஆயுர்வேதம் குறித்து கற்பதற்கு சென்ற சென் அன்ரூசை சேர்ந்த அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் அவரை நாடுகடத்துவதற்கு விடுத்த வேண்டுகோளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது எனினும் இலங்கையின் மிகமோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தான் தடுத்துவைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தயக்கம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மூலம் சமூக மத இன பிரிவினைகளை தூண்டுபவர்களை தடுத்து வைக்க அனுமதிக்கின்றது.

இதேவேளை இலங்கை பிரிட்டிஸ் பெண் மணி பாதுகாப்பாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கவேண்டும் என்பது தொடர்பில் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் வென்டி சம்பெர்ளின் பிரிட்டனின் வெளிவிவகார அலுவலக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

அவ்வாறான உத்தரவாதம் வழங்கப்படும் வரை தான் தனது மறைவிடத்திலிருந்து வெளியே வரமுடியாது என பிரேசர் தெரிவித்துள்ளார்.

நான் இங்கு இருக்கின்றேன் உயிர்பிழைத்து வாழ்கின்றேன் ஏதாவது மாற்றம் நிகழ்வதற்காக காத்திருக்கின்றேன் என பிரேசர் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ளார்.

எனக்கு வேறு வழியில்லை நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்காவது உறங்கமுடியும் உணவு உண்ண முடியும் என்பதை உறுதி செய்கின்றேன் அவையே எனது முன்னுரிமைக்குரிய விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இணையம் என்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய விடயம் கடந்த ஒரு மாதகாலமாக அதனை பயன்படுத்த முடிந்தமை மிகப்பெரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை வாழ்க்கை என நான் கருதவில்லை இது உயிர்வாழ்தல் முழு உலகமும் என்னை இலங்கையில் ஆட்சியில் உள்ள பயித்தியக்காரர்களின் கரங்களில் கைவிட்டுள்ளதாக கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version