பிக் பாஸ் 7ம் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. இந்த முறை இரண்டு வீடுகள் இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தொடக்க விழா தொடங்கியதும் கமல் லோக்கல் சென்னை பாஷை பேசும் கெட்டப்பில் வீட்டுக்குள் சென்று பேசுகிறார்.
வெளியில் ஒரு கமல், வீட்டுக்குள் இன்னொரு கமல் என மொத்தம் இரண்டு பேரா என ரசிகர்கள் ஆச்சர்யம் ஆகி இருக்கின்றனர்.
இரண்டு வீடு, ஆனால் ஒரே கிச்சன்.. அதிரடியாக தொடங்கியது பிக் பாஸ் 7 | Bigg Boss 7 Tamil Launched Two House One Kitchenமொத்தம் இருக்கும் இரண்டு வீடுகளையும் காட்டிய கமல், இறுதியில் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தையும் கூறினார்.
ஒரே கிச்சன் மட்டும் தான் இருக்கும் என கமல் கூறியுள்ளார். அதனால் இதை வைத்து தான் போட்டியாளர்கள் நடுவில் பிரச்சனை வரும் என எதிர்பார்க்கலாம்.
“தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருப்பதை அடுத்து ஏழாவது சீசன் தொடங்கப்படட்டது. இன்று ஏழாவது சீசனுக்கான போட்டியாளர்கள் யார் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் விவரம் பின்வருமாறு..,
சரவணா விக்ரம்மாயா
எஸ் கிருஷ்ணாவிஷ்னு
விஜய்
ஐஷூ
ஜோவிகா
விஜயகுமார்
அக்ஷயா உதயகுமார்மணி
மணி சந்திரா
வினுஷா தேவி
நிக்சென்
பிரதீப் அந்தோனி
ரவீனா தாஹா
பூர்ணிமா ரவி
கூல் சுரேஷ்
யுகேந்திரன் வாசுதேவன்
விசித்ரா
இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதை போன்றே ஏழாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர்.”,