இலங்கைக்கு இவ்வாண்டின் எட்டாவது மாதமாக செப்டெம்பரில் 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

எவ்வாறாயினும், இலங்கை 111,938 சுறு்றுலா பயணிகள் வருகையோடு செப்டெம்பர் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 93 சதவீதத்தை மட்டுமே அடைந்துள்ளது.

நாட்டிற்கு செப்டெம்பர் மாதத்தில் குறைந்தது 120,201 சர்வதேச சுற்றுலா பயணிகளை வரவழைப்பதை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) இலக்காக கொண்டிருந்தது.

இந்நிலையில், செப்டெம்பர் மாத்தத்தில் முக்கிய குறிப்பிடத்தக்க மைல்கல்லான 10 இலட்சம்  சுற்றுலா பயணிகளின் வருகையை கடந்தது.

ஜனவரி மாதம் 01 முதல் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மொத்தம் 1,016,256 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக  சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு கொவிட் தொற்று மற்றும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளுடன் போராட வேண்டிருந்ததன் காரணமாக பிற நாடுகள் இலங்கைக்கு பயண தடைகளை விதித்திருந்தன.

செப்டெம்பர் மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை முதல் மூன்று வாரங்களில் சராசரியாக 26,135 ஆகவும், நான்காவது வாரத்தில் 33,531 ஆகவும் அதிகரித்துள்ளது.

அதன்படி, செப்டெம்பரின் நாளாந்த வருகை சராசரியாக 3,731 ஆக இருந்தது, ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 4,400 இல் இருந்து 15 சதவீதம் குறைவாகும்.

செப்டெம்பரில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இது மொத்த வருகையில் 27 (30,063)  சதவீதமாகும்.

இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. இது மொத்த வருகையில் (8,445) 8 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை தரப்படுத்தலில் சீனா மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது.

மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது, இது மாதத்திற்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் (7,504) 7 சதவீத பங்களிப்பை வழங்கியது.

ஜேர்மனி, ரஷ்யா, அவுஸ்திரேலியா, இஸ்ரேல், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை அடங்கும்.

இவ்வாண்டு இறுதிக்குள் 155,000,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காக கொண்டுள்ளது.

கடந்த வாரம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, கடந்த வருடங்களில் எதிர்கொண்ட சவால்களில் இருந்து உள்ளூர் சுற்றுலாத் துறை மீண்டு வருவதன் மூலம், ஆண்டு இறுதி இலக்கை இலங்கைகடந்து விடும் என  நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் வருமான ஈட்டிய 833 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, சுற்றுலாத்துறையில் இருந்து 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை ஈட்டியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version