முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தாெங்கிய நிலையில் நேற்று (02) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறையை சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் எனும் 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version