“நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. ”

:” தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர். இசை- கண்ணன் நாராயணன். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன்.

கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரத்தம் படத்தின் முதல் பாடலான ‘ஒரு நாள்’ பாடலைப் சமீபத்தில் வெளியிட்ட படக்குழு தற்போது ரத்தம் தெறிக்கும் 5 நிமிட முன்னோட்ட விடியோவினை வெளியிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version