உலக நாடுகளில் பலவிதமான அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு பலரையும் அதிர்ஷ்டசாலிகளாக மாற்றி வருகிறது.

அவ்வாறு எந்தளவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறதோ, அதேயளவுக்கு பரிசுத் தொகை கிடைக்குமென நம்பி தாம் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் சிலர் தொலைத்து விடுகிறார்கள்.

​அதிர்ஷ்ட இலாபச் சீட்டை தொடர்ந்து வாங்குபவர்களுக்கு ஒருமுறை கூட பரிசு கிடைக்காமல் போகலாம். ஆனால், இலாபச் சீட்டுகளையே வாங்காதவர்களுக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய சம்பவமும் நடந்துள்ளது.

அந்தவகையில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கங்காதரன் என்பவர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டு முகவராக பணியாற்றி வருகிறார்.

அவர் விற்பனை செய்த அதிர்ஷ்ட இலாபச்சீட்டுகளில்? மாநில அரசாங்கத்தின் ஃபிப்டி ஃபிப்டி டிக்கெட் ஒன்று மட்டும் விற்பனையாகமல் இருந்துள்ளது.

அந்த இவர் வைத்திருந்துள்ளார். அந்த சீட்டுக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தெரிவிக்கலாம் என்று நிகழ்ச்சி தொகுப்பாளரான பரிசு வென்றவருக்கு தொலைபேசி வாயிலாக அழைக்கையில் அவர் இது போலி, ஏமாற்று வேலை ஸ்பேம் கால் என்று அழைப்பை துண்டித்துள்ளார்.

அதிர்ஷ்ட இலாபச்சீட்டு நிறுவன அதிகாரிகள் மீண்டும் வேறு எண்ணில் இருந்து முயற்சி செய்து பரிசு விழுந்த செய்தியை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version