ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பணக்கார இந்தியர்கள்

பணக்கார இந்தியர்கள் பட்டியலை கடந்த அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி 68 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் 29.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஆனால் இந்த பட்டியலில் புதிதாக தமிழர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். பிரபல தொழிலதிபரும் கேபிஆர் மில் நிறுவனர் மற்றும் தலைவருமான கே.பி.ராமசாமி, பட்டியலில் புதிதாக நுழைந்துள்ளார். தற்போது ரூ.19,133.7 கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் 100வது இடத்தைப் பிடித்துள்ளார்.

யார் இந்த கே.பி.ராமசாமி?

ஈரோடு மாவட்டம், கல்லியம்புதூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கே.பி.ராமசாமி. கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர், இந்தியாவின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி வணிகம் ஒன்றை நிறுவி அதில் வெற்றி கண்டுள்ளார்.

1984இல், KPR மில் நிறுவப்பட்டது. பின்னர் கே.பி.ராமசாமி தனது நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.

2013ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்கினார். மேலும் கேபிஆர் குழுமம், 2019ல் ஆண்களுக்கான இன்னர்வேர் பிராண்டான Fasoவை விற்பனை செய்யத் தொடங்கியது.

சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி செய்வதோடு கூடுதலாக, KPR மில் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பின்னப்பட்ட ஆடைகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றது.

Forbes வலைத்தளத்தின்படி, KPR மில் ஒவ்வொரு ஆண்டும் 128 மில்லியன் ஆடைகளை உற்பத்தி செய்கிறது, விளையாட்டு உடைகள் முதல் நைட் டிரஸ் வரை எண்ணற்ற ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் இந்த H&M, Marks & Spencer மற்றும் Walmart போன்ற கடைகளில் விற்கப்படுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version