யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்று மாலை கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீது புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கல்வீச்சு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version