கட்டான, அனியாகந்த பிரதேசத்தில் வேலை செய்யும் இளம் பெண்ணை அடித்தும் உதைத்து நாற்காலிகளால் கொடூரமான தாக்கிய கணவன் மனைவியை கட்டான பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.

யுவதியை மேற்படி தமப்தியினர் கொடுரமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் அலைவரிசைகளில் வெளியானது , இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸார் சந்தேகநபர்கள் கைது செய்துள்ளனர்.

கட்டான பிரதேசத்தில் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் அவரது மனைவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி கடமை தவறியதன் காரணமாக சந்தேக நபரும் அவரது மனைவியும் யுவதியை அடித்து பிளாஸ்டிக் கதிரைகளால் தாக்கும் கா ணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். .

Share.
Leave A Reply

Exit mobile version