இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு முதல்­மு­றை­யாக மரண பயத்தைக் காட்­டி­யி­ருக்­கி­றது ஹமாஸ் அமைப்பு. இஸ்­ரேலின் 75 வருட வர­லாற்றில் இவ்­வா­றா­ன­தொரு இரத்தக் கள­ரியை அந்த நாடு சந்­தித்­த­தில்லை.

எப்­பொ­தெல்லாம் பலஸ்­தீ­னர்கள் கிளர்ந்­தெ­ழுந்து போரா­டி­னாலும், அவர்­களின் மீது இஸ்ரேல் மிகை­யான படை­ப­லத்தைப் பயன்­ப­டுத்தி, அவர்­க­ளுக்கு பேர­ழி­வையும், பேரச்­சத்­தையும் கொடுத்து வந்­தது.

இதுதான், இஸ்ரேல்- – பலஸ்­தீன மோதல் கள் ஆரம்­பித்த காலத்தில் இருந்து நடந்து வந்த நிகழ்வு.

சுற்­றி­வர அரபு நாடுகள் மத்­தியில் இஸ்ரேல் ஒரு தனித்­தே­ச­மாக இது­வரை நிலைத்து நின்றது என்றால், அதற்கு நான்கு முக்­கி­ய­மான கார­ணங்கள் உள்­ளன.

ஒன்று,- தெளி­வாக திட்­ட­மி­டப்­பட்ட யூதக் குடி­யேற்­றங்கள். இரண்டு-, அதன் படை­ப­லமும், மிகச் சிறந்த இரா­ணுவக் கட்­ட­மைப்பும்.

மூன்று-, எதி­ரி­க­ளுக்கு அழி­வு­களைக் கொடுத்து, அவர்­களை அச்ச நிலையில் வைத்­தி­ருத்தல். நான்கு,- அமெ­ரிக்கா போன்ற நாடு­களின் ஆத­ரவு.

அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­லக ஆத­ரவு இருந்­தாலும், ஜோர்தான், எகிப்து, சிரியா, லெபனான், பலஸ்­தீனம் என ஐந்து அரபு நாடு­க­ளுக்கு நடுவே, 10 மில்­லி­யனை விடவும் குறைந்த யூதர்­களை கொண்ட இஸ்ரேல், 75 ஆண்­டு­க­ளாக தப்பிப் பிழைத்­தி­ருக்­கி­றது என்றால் அதற்கு ஒரே காரணம், அதன் படை­ப­லமும், இரா­ணுவ உத்­தி­களும் தான்.

இஸ்ரேல் மீது அர­பு­லக நாடுகள் தங்­களின் பெரும் படை­ப­லத்தைக் கொண்டு நடத்­திய போர்கள், எதிர்­ம­றை­யான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்­தின.

கடை­சியில் தங்­களின் நிலப்­ப­ரப்­பு­க­ளையும் இஸ்­ரே­லிடம் கொடுத்து விட்டு ஓடும் நிலை அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

குறைந்த படை­ப­லத்தைக் கொண்­டி­ருந்­தாலும், இஸ்­ரே­லியப் படை­களின் போர்த்­தந்­தி­ரங்­களும், நவீன போரா­யு­தங்­களும், அவர்­களின் மனோ­தி­டமும் தான், கடந்த 75 ஆண்­டு­க­ளாக இஸ்­ரே­லி­யர்­களை இவ்­வா­றா­ன­தொரு மரண பயம் இல்­லாமல் வாழ வைத்­தி­ருந்­தது.

எகிப்து, லெபனான், சிரியா, ஜோர்தான் போன்ற நாடு­க­ளிடம் இருந்தும், பலஸ்­தீ­னர்­க­ளிடம் இருந்தும் கைப்­பற்­றிய நிலப்­ப­ரப்­பு­களில் யூதர்கள் நம்­பிக்­கை­யுடன் குடி­யேறி நிலை­கொண்­ட­தற்கு முக்­கி­ய­மான காரணம் இஸ்­ரேலின் நுட்­ப­மான இரா­ணுவ, குடி­யேற்­ற­வாத கொள்கை தான்.

பலஸ்­தீ­னர்­க­ளிடம் இருந்து பறிக்­கப்­பட்ட நிலங்­களில் யூத குடி­யேற்­றங்கள் நிறு­வப்­பட்டு, பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ராக – தனது நாட்டு மக்­களைக் கொண்டு ஒரு கவ­சத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தது இஸ்ரேல். முல்­லைத்­தீவு, வவு­னியா, திரு­கோ­ண­மலை எல்­லை­களை உள்­ள­டக்கி வெலி­ஓயா சிங்­களக் குடி­யேற்றத் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டதும் இதே பாணியில் தான்.

ஹமாஸின் கட்­டுப்­பாட்டில் உள்ள காஸா எல்­லையில் இருந்து மிக குறு­கிய தூரத்­துக்குள் இஸ்­ரே­லி­யர்கள் பாது­காப்பு உணர்­வுடன் இருந்­தி­ருக்­கி­றார்கள்.

அதனால் தான் காஸா எல்­லையில் இருந்து வெறும் 2 கிலோ மீற்றர் தொலை­வுக்குள் உள்ள கிப்புட்ஸ் நகரில் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் பாரிய இசை நிகழ்ச்­சியில் பங்­கேற்­றி­ருக்­கின்­றனர்.

காஸா எல்­லைக்குள் இருந்து பரா கிளை­டர்கள் மூலம் வான் வழி­யா­கவும், தரை­வ­ழி­யா­கவும் ஊடு­ரு­விய ஹமாஸ் அமைப்­பினர், இசை நிகழ்ச்சி நடந்து கொண்­டி­ருந்த இடத்தில் நடத்­திய தாக்­கு­தல்­களில் மட்டும், 270 பேர் உயி­ரி­ழந்­தனர்.

இந்த நக­ரத்தைக் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்த ஹமாஸ் அமைப்­பினர் நூற்­றுக்கும் அதி­க­மா­னோரை பணயக் கைதி­க­ளாக கொண்டு சென்­றி­ருக்­கி­றார்கள்.

அங்­கி­ருந்த வீடு­களை எரித்த போது, நில­வ­றை­க­ளுக்குள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த 100 இற்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­தி­ருக்­கி­றார்கள்.

ஹமாஸ் அமைப்பு குறிப்­பிட்ட நேரத்­துக்குள் ஆயி­ரக்­க­ணக்­கான ரொக்­கட்­டு­களை ஏவி­யது மாத்­தி­ர­மல்ல, இஸ்­ரே­லிய எல்­லை­களை ஊட­றுத்தும், நக­ரங்­க­ளுக்குள் நுழைந்தும் தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருக்­கி­றது.

மிக நன்­றாக திட்­ட­மிட்டு, தரை, கடல், வான் வழி­யாக- ஒருங்­கி­ணைத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட தாக்­குதல் இது.

விடு­தலைப் புலி­களின் காலத்தில் ஓயாத அலைகள் என்ற பெயரில், முன்­னெ­டுக்­கப்­பட்ட தாக்­கு­தல்­களில் பயன்­ப­டுத்­தப்­பட்ட உத்­திகள், இரா­ணுவக் கட்­டுப்­பாட்டுப் பகு­தி­களில் அவர்கள் முன்­னெ­டுத்த பல கொமாண்டோ பாணி­யி­லான தாக்­குதல் உத்­திகள் போன்­றன- இஸ்ரேல் மீதான தாக்­கு­தல்­களில் ஹமாஸ் அமைப்­பினால் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இஸ்­ரே­லி­யர்­களின் விடு­முறை தினத்தில், அவர்கள் பெரு­ம­ளவில் ஒன்று கூடு­கின்ற நாளைத் தெரிவு செய்து நடத்­தப்­பட்­டிக்­கி­றது இந்த தாக்­குதல்.

ஹமாஸின் இந்த தாக்­குதல் மிகவும் வெற்­றி­க­ர­மா­ன­தொன்று. தெரிவு செய்­யப்­பட்ட இலக்­கு­களும், நேரமும் பயன்­ப­டுத்­திய உத்­தி­களும் ஒட்­டு­மொத்த இஸ்­ரே­லையும் ஆட்டம் காண வைத்­தி­ருக்­கி­றது.

யூதர்கள் மத்­தி­யிலும், உலகம் முழு­வ­திலும் அசைக்க முடி­யாத சக்தி என இஸ்ரேல் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்த விம்­பத்தை ஒரே நாளில் நொறுக்கிப் போட்­டி­ருக்­கி­றது இந்த தாக்­குதல்.

இஸ்­ரே­லுக்கு இது பலத்த தோல்­வியை கொடுத்­தி­ருக்­கி­றது. பல பாடங்­களைக் கற்றுக் கொடுத்­தி­ருக்­கி­றது.

இவ்­வா­றா­ன­தொரு தாக்­கு­த­லுக்கு ஹமாஸ் தயா­ராகி வரு­கி­றது என்ற ஒரு சிறிய துரும்­ப­ளவு புல­னாய்வுத் தக­வலைக் கூட இஸ்­ரே­லிய புல­னாய்வு அமைப்­பு­களால் பெற முடி­ய­வில்லை என்­பது தான் ஆச்­ச­ரியம்.

எத்­த­கைய நவீன தொழில்­நுட்ப புல­னாய்வு, கண்­கா­ணிப்பு வச­தி­களை இஸ்ரேல் கொண்­டி­ருந்­தாலும், அவை­யெல்­லா­வற்றின் கண்­க­ளிலும் மண்ணைத் தூவிக் கொண்டு- ஒரு திடீர்ப் பெருந் தாக்­கு­தலை நடத்த முடியும் என்ற இரா­ணுவ பாடத்தை ஹமாஸ் கற்றுக் கொடுத்­தி­ருக்­கி­றது.

விடு­தலைப் புலி­க­ளுக்குப் பிந்­திய ஒன்­றரை தசாப்­தங்­களில் மிக நவீ­ன­மான தொழில்­நுட்­பங்கள் வந்து விட்­டன.

அவற்றை கையாண்ட இஸ்­ரேலை ஏய்த்து விட்டு இந்த தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றி­ருப்­பது தான் கவ­னிக்­கப்­பட வேண்­டி­யது.

புல­னாய்வுத் தவ­றுதான் இதற்குப் பிர­தான காரணம் என்று கூறி­யி­ருக்­கிறார் இஸ்­ரேலின் மொசாட் உளவுப் பிரிவின் முன்னாள் தலை­வ­ரான டன்னி யாடொம் (Danny Yatom).

“சனிக்­கி­ழமை இஸ்­ரேலின் பாது­காப்பு தந்­தி­ரோ­பா­யங்கள் அடி­யோடு சரிந்து விட்­டன. ஹமாஸ் தாக்­குதல் நடத்­திய போது எல்­லாமே தவ­றாகி விட்­டது. யாருக்­குமே புல­னாய்வுத் தகவல் கிடைத்­தி­ருக்­க­வில்லை.” என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

ஒட்­டு­மொத்­தத்தில் இஸ்­ரே­லி­யர்கள், தங்­களின் மீது தங்­களின் நாட்டின் மீது, தங்­களின் படை­யினர் மீது கொண்­டி­ருந்த நம்­பிக்­கையை இழந்து விட்­டனர்.

பலஸ்­தீ­னர்­களின் நிலங்­களை ஆக்­கி­ர­மித்து, குடி­யேற்­றங்­களின் மூலம், பாது­காப்பு வேலியை அமைத்த இஸ்­ரே­லிய தந்­தி­ரோ­பாயம் இப்­போது தோல்வி கண்­டி­ருக்­கி­றது.

காஸா எல்­லைக்கு அருகே தாக்­கு­த­லுக்கு உள்­ளான நக­ரங்­களில் இருந்­த­வர்கள் கடந்த 50 ஆண்­டு­களில் இவ்­வா­றா­ன­தொரு தாக்­கு­தலை சந்­திக்­க­வு­மில்லை, எதிர்­பார்க்­க­வு­மில்லை என்று கூறி­யி­ருக்­கி­றார்கள்.

அதுதான் யூதர்கள் மத்­தியில் இஸ்ரேல் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்த நம்­பிக்கை. முன்னர் ஹமாஸ் ஒரு ரொக்­கட்டை ஏவினால் பல­நூறு குண்­டு­களை ஏவிப் பதி­லடி கொடுக்கும் இஸ்ரேல்.

இஸ்­ரே­லியர் ஒருவர் காயப்­பட்டால் பல பலஸ்­தீ­னர்­களின் உயிர்கள் பறிக்­கப்­படும். இது தான் இது­வரை இருந்­தது. இப்­போது ஹமாஸ் கொத்துக் கொத்­தாக யூதர்­களை வேட்­டை­யாடி பழியைத் தீர்த்­தி­ருக்­கி­றது.

பொது­மக்­களை மாத்­தி­ர­மல்ல, படைத் தள­ப­தி­களைக் கூட கொன்­றி­ருக்­கி­றது. கேர்ணல் ஒருவர் உள்­ளிட்ட பல இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும் பணயக் கைதி­க­ளாக பிடித்துச் சென்­றி­ருக்­கி­றது. இஸ்­ரேலின் பாது­காப்பு கட்­ட­மைப்பில் இருந்த ஓட்­டை­களை சரி­யாக கவ­னித்து திட்­ட­மிட்­டப்­பட்­டி­ருக்­கி­றது இந்த தாக்­குதல். இது யூத குடி­யேற்­ற­வாத கொள்­கைக்கு கிடைத்த பேரிடி.

யூதக் குடி­யேற்­றங்­களின் மூலம், பலஸ்­தீ­னர்­களின் நில உரி­மை­களை இல்­லாமல் ஆக்­கி­வி­டலாம் என்ற ஆக்­கி­ர­மிப்புக் கொள்­கைக்கு கிடைத்­தி­ருக்­கின்ற பெருந்­தோல்வி.

காஸா எல்­லைக்கு அருகே இனி குடி­யே­று­வ­தற்கு ஒவ்­வொரு யூதரும் பயப்­ப­டு­வார்கள்.

பலஸ்­தீ­னர்கள் மத்­தியில் பல தசாப்­தங்­க­ளாக பொங்கிக் கொண்­டி­ருந்த வெஞ்­சினம் தான் இப்­போது வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.

அவர்­களின் நிலத்­துக்­கான போராட்டம் ஓய­வில்லை, ஓயாது என்ற செய்­தியை தெளி­வாக கூறி­யி­ருக்­கி­றது.

தங்­களின் நிலங்­களை ஒப்­ப­டைத்து. தங்­க­ளுடன் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்­ளாமல், யூதர்­களால் நிம்­ம­தி­யாக தங்­களின் நாட்டில் இருக்க முடி­யாது என்ற உண்­மையை அவர்கள் உறைக்க கூறியிருக்கிறார்கள். இந்த உண்மையும், பாடமும் இலங்கைக்கு முக்கியமானது.

இலங்கை அரசாங்கமும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியும், பௌத்த மயமாக்கலின் மூலமும், தமிழரின் நிலங்களை அபகரித்து விடலாம் எனக் கணக்குப் போடுகிறது. இது ஆபத்தானது. இன்றில்லா விட்டாலும் என்றோ ஒருநாள், இதேபோல தமிழர்களும் கொதித்தெழும் நிலை வரலாம்.

பலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்து யூதக் குடியேற்றங்களுக்கு இஸ்ரேல் எவ்வாறு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததோ- அதேபோலத் தான், இங்கும் அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களுக்கு அடித்தளம் போடுகிறது. ஆனால், தமிழர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் தான் சிங்களவர்களும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்.

ஹமாஸின் தாக்குதலை, வெறுமனே பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற கோணங்களில் நோக்குவதை விட்டு- யதார்த்தபூர்வமாக இதனை பார்க்க வேண்டும்.

இன்றைக்கு இஸ்ரேலியர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த பாடத்தை, இலங்கை தனக்கானதாகவும் எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனமானது.

-சுபத்திரா-

Share.
Leave A Reply

Exit mobile version