“தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன் ” என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த காதலன் தன் உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே திங்கட்கிழமை (16) தன்னுயிரை உயிர் மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் காதலி திருமண வயதை அடைந்திருக்காத நிலையில் இரு வீட்டிலும் அவர்களின் காதல் விவகாரம் தெரிந்துள்ளது. காதலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

அந்நிலையில் ” என்னை உடனே திருமணம் செய். இல்லையென்றால் நான் சாகிறேன் ” என காதலி காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதனை பார்வையிட்ட காதலன் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version