அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிளின் கழுத்தை கைவிலங்கினால் நெரிக்க முயற்சித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், இவரது இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெற்றிருந்தன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த கே.ஏ.மகேஷ் தனஞ்சய (22) என்பவரே இதில் உயிரிழந்திருந்தார்.

இவருடைய இறுதிக்கிரியைகளின் போது, அவிசாவளை நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிட்டத்தட்ட 2 மணிநேரம் பட்டாசுகள் வெடித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற்பகல் 2.00 மணி முதல் தல்துவ சந்தி, அவிசாவளை நகரம், மணியங்கம, கலாபலன கந்த, அட்பந்திய உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியடைந்ததாக அவிசாவளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அப்பகுதி மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version