தாட் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு 2 விமானம் தாங்கிக் கப்பல், மற்றும் ஜெட் விமானங்களை அமெரிக்கா அனுப்பியிருந்தது. தற்போது, அவற்றுடன் தாட்(THAAD) என்னும் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது

தாட் அமைப்பு, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கக் கூடியது.

இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், கூடுதல் படையினர் எந்த நேரத்திலும் அங்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஆனால், எத்தனை பேர் தயார் நிலையில் உள்ளனர் என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.

இந்த நடவடிக்கை, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பாலத்தீன நட்பு நாடுகளின் சமீபத்திய தலையீட்டினைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் கூறியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதலை அடுத்து, அமெரிக்கா ஒரு விமானம் தாங்கி கப்பல், மற்ற கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு நகர்த்தியது. மேலும் இஸ்ரேலுக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதாக உறுதியளித்தது.

ஈரானுடனான பதற்றங்களைக் குறைப்பதாகக் கூறி, மத்திய கிழக்கிலிருந்து வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா திரும்பப் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

 

இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை தகர்த்த அமெரிக்க போர்க்கப்பல்
தாட் ஏவுகணை அமைப்பு

மத்திய கிழக்கில் போர்க்கப்பல்கள், படைகள் மற்றும் போர் விமானங்களுடன் பல்வேறு அமெரிக்க தளங்கள் உள்ளன.

இதற்கிடையில், ஈரானுடன் இணைந்த ஹவுதி(Houthi) இயக்கத்தால் ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் இடைமறித்து அழித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக பென்டகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

யுஎஸ்எஸ் கார்னி(USS Carney), ஏவுகணை அழிப்புக் கப்பலானது, வியாழன் அன்று வடக்கு செங்கடலில் இயங்கிக் கொண்டிருந்தது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது சமீப நாட்களில் பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பென்டகன் கூறியுள்ளது.

காசாவில் உள்ள ஹமாஸ் இலக்குகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவதால், ஈரான் ஆதரவு குழுக்களின் செயல்பாடு குறித்து வாஷிங்டன் எச்சரிக்கையுடன் உள்ளது.

ஏமனில் இருந்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் மற்றும் பல ஆளில்லா விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பென்டகனின் பிரிகேடியர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் கூறினார்.

இந்த சம்பவத்தில் காயங்கள் ஏதும் இல்லை என்றும், போர்க்கப்பல் இலக்காகத் தெரியவில்லை என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எதை இலக்காகக் கொண்டுள்ளன என்பதை நாங்கள் உறுதியாகக் கூற முடியாது, ஆனால் அவை ஏமனில் இருந்து ஏவப்பட்டன, செங்கடலை ஒட்டி வடக்கு நோக்கி, இஸ்ரேலின் இலக்குகளை நோக்கிச் செல்லக்கூடும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஈராக்கில், அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச படைகள் தங்கியுள்ள பல தளங்களை நோக்கியும் ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

தாக்குதல்களில் வீரர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது.

காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று அமெரிக்காவை ஈராக் ஆயுதக்குழுக்கள் எச்சரித்துள்ளன.

கடந்த புதன்கிழமை அன்று ஒரு ட்ரோன் சிரியாவில் அமெரிக்கப் படைகளைத் தாக்கியது. மற்றொரு ட்ரோனை அமெரிக்கா வீழ்த்தியது.

“இந்த தாக்குதல்களுக்கு சாத்தியமான பதில்களை நான் கணிக்கப் போவதில்லை என்றாலும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவ வீரர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று பிரிக் ரைடர் கூறினார்.

மத்திய கிழக்கில் போர்க்கப்பல்கள், படைகள் மற்றும் போர் விமானங்களுடன் பல்வேறு அமெரிக்க தளங்கள் உள்ளன.

 

தாட் வான் பாதுகாப்பு கவசம் எவ்வாறு செயல்படும்?

 

தாட் ஏவுகணை அமைப்பு

அமெரிக்கா முன்னதாக குவாம் மற்றும் ஹவாய் பகுதிகளில் தாட் வான் பாதுகாப்பு கவசத்தை நிறுவியது.

பாய்ந்து வரும் குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழியிலேயே எதிர்கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது, தாட்.

200 கிலோமீட்டர் வரம்பில் 150 கிலோமீட்டர் உயரம் வரை சென்று தாக்கும்.

வட கொரியாவின் சாத்தியமான தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னதாக குவாம் மற்றும் ஹவாய் பகுதிகளில் தாட் ஏவுகணையை நிறுவியது.

தாட் எவ்வாறு வேலை செய்கிறது?

தாட் ஏவுகணை தடுப்பு ரேடார் ஏவப்படும் வாகனத்தில் இருந்து ஒரே நேரத்தில் எட்டு ஏவுகணைகளை அனுப்ப முடியும்.

எதிரி படை ஓர் ஏவுகணையை செலுத்தும் போது, ‘தாட்’ ரேடார் அமைப்பு அதை கண்டறிந்துவிடுகிறது. கட்டளையிடப்பட்டு இயக்கப்பட்டதும் அது பறந்து சென்று எதிரியின் ஏவுகணையை இடைமறித்து வழியிலேயே தாக்கி அழிக்கிறது.

தாட் ஏவுகணை தடுப்பு ரேடார் ஏவப்படும் வாகனத்தில் இருந்து ஒரே நேரத்தில் எட்டு ஏவுகணைகளை அனுப்ப முடியும்.

அமெரிக்காவில் தொடரும் போராட்டம்

பாலத்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க நகரங்களில்

காஸா மீதான தனது பதிலடி வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இந்த மோதலின் நடுவில் சிக்கியுள்ள பாலத்தீனர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை அமெரிக்க நகரங்களில் அணிவகுத்துச் சென்றனர்.
அமெரிக்காவில் தொடரும் போராட்டம்

அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜலஸ் நகரில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டம்.
அமெரிக்காவில் தொடரும் போராட்டம்

அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜலஸ் நகரில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டம்.

 

காஸாவுக்கு உதவிகள் அனுமதிக்கப்படும் என ஐ.நா. நம்பிக்கை

சனிக்கிழமையன்று இருபது உதவி ட்ரக்குகள் காஸாவிற்குள் ரஃபா கடவுப்பாதை வழியாக நுழைய அனுமதிக்கப்பட்டன.

ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகள் குழு தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், ஞாயிற்றுக்கிழமை காஸா பகுதிக்குள் இரண்டாவது முறை நிவாரண உதவிகள் அனுமதிக்கப்படும் என்று நம்புவதாகக் கூறினார்.

மார்ட்டின் நேற்று மற்றொரு நிவாரணத் தொகுப்பு அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

சனிக்கிழமையன்று இருபது உதவி ட்ரக்குகள் காஸாவிற்குள் ரஃபா கடவுப்பாதை வழியாக நுழைய அனுமதிக்கப்பட்டன.

ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் போக்குவரத்து தடை விதித்த பின்னர் முதன் முறையாக அந்த ட்ரக்குகள் காஸாவுக்குள் வந்துள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version