“கன்னியாகுமரி,கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை அருகே குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சமூக வலைதளம் மூலம் தக்கலை பகுதியை சேர்ந்த ரெதீஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் அஜி தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சுய உதவிக்குழு மற்றும் உறவினர்களிடம் இருந்து லட்சக் கணக்கிலான பணத்தை கடனாக பெற்ற அஜி, குழந்தைகளுடன் திடீரென தலைமறைவானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தி வந்த போலீசார், செல்போன் சிக்னல் மூலம் கேரளாவின் பாறசாலை அருகே அஜி இருப்பதை கண்டுபிடித்தனர்.

அஜியை கைது செய்து அவருடைய குழந்தைகளை மீட்ட போலீசாருக்கு, தகாத உறவு காதலனுடன் செட்டிலாக அஜி திட்டமிட்டதும், இதற்காக உறவினர்களிடம் இருந்து கடன் பெற்று காதலனுடன் தப்பியோடியதும் தெரியவந்துள்ளது.

சுமார் 57 லட்சத்திற்கு அஜி வீடு வாங்கியது தெரியவர, தலைமறைவாக உள்ள ரெதீஸை போலீசார் தேடி வருகின்றனர்.”,

Share.
Leave A Reply

Exit mobile version