விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியான சம்பவத்தை அடுத்து, அவரது மனைவியும், முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் காரொன்று மோதியதில் படுகாயமடைந்த ஒருவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், இது சாதாரண விபத்து அல்ல, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது முறைக்கேடான கணவன் இணைந்து செய்த கொலை எனத் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்தே உயிரிழந்த கணவனின் மனைவியும், மனைவியின் முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version