இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 423 ரூபாவாகும்

இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் 356 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 431 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் ​அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version