காஸாவில் இடம்பெறும் மோதலில் அங்கிருந்து வெளியேறிய 11 இலங்கையர்கள் எகிப்தின் ரஃபா எல்லையை சென்றடைந்துள்ளதாக பலஸ்தீனத்திற்கான இலங்கை தூதரக அதிகாரி பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தில் உள்ள இலங்கையின் பிரதிநிதி அலுவலகம் இந்த குழுவை நாடு கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காஸாவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 இலங்கையர்கள் சிக்குண்டுள்ளனர்.

இவர்களில் 4 இலங்கையர்கள் காஸாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் பிரதானி பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version