வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் என்ற 28 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

இன்று (05) காலை வெள்ளவத்தை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதேசவாசிகளால் சடலம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடலில் சிவப்பு நிற சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Share.
Leave A Reply

Exit mobile version