முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்து வந்த வீட்டில் கடந்த சனிக்கிழமை (04) சந்தேக நபர்கள் புகுந்து பல பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக ரெியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் தனது கணவனை இழந்துவிட்ட நிலையில் தனது மகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சிறீபாலன் ஜுட் கிறிஸ்ரா என்பவர் வளர்த்து வருவதோடு தனது தாயாரையும் பராமரித்து வருகின்றார் .
அத்தோடு மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி நகைகளை கோரி அவர்களிடம் இருந்த சுமார் ஆறு பவுனுக்கு மேற்ப்பட்ட நகைகளையும் கொள்ளையடித்து அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
முன்னைய காலத்தில் நாம் எந்த பயமும் இன்றி வாழ்ந்தோம் ஆனால் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எம்மை பொலிஸ் நிலையத்திறகோ ஊடகங்களுக்கோ தகவல் வழங்க கூடாது எனவும் அதை மீறி கூறினால் மூவரையும் வந்து கொலை செய்வோம் எனவும் மிரட்டி சென்றுள்ளதாக தாய் மேலும் தெரிவித்துள்ளார் .
இந்த நிலையில் இன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது .