கொழும்பு தாமரைக் கோபுரம் சாகச விளையாட்டு ஒன்று அறிமுகப்படுதியுள்ளது.

இந்த பரீட்சார்த்த திட்டத்தின் ஆரம்ப விழா நேற்று இடம்பெற்றது.

தாமரைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து கயிற்றின் உதவியுடன் இறங்கும் இந்த அனுபவம், இவ்வருடம் டிசம்பர் மாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் கோபுரத்திலிருந்து 195 மீற்றர் உயரத்திலிருந்து கீழே இறங்கி, இந்த முன்னோட்டத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

நாட்டின் மிக உயரமான கோபுரத்திலிருந்து இறங்கும் இந்த சாகச அனுபவத்தில் பங்கேற்க, மருத்துவ அறிக்கையொன்றை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமரைக் ​​கோபுரம் திறக்கப்பட்டு கடந்த பதினான்கு மாதங்களில், சுமார் 34,000 வெளிநாட்டு பார்வையாளர்கள் உள்ளிட்ட 1.35 மில்லியன் பேர் வருகை தந்துள்ளதாக லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி பிரைவேட் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version