இஸ்ரேல்-ஹமாஸ் போர் இறுதியில் காஸாவை ஒரு சுடுகாடாக மாற்றி விட்டது என்பதே உண்மையாகும். அப்பாவி குழந்தைகள், தாய்மார், வயோதிபர்கள் என எவரையும் யுத்தம் விட்டு வைக்கவில்லை. தமது சொந்த இடத்திலேயே அகதிகளாக மக்கள் அலையாய் அலைகின்றனர்.
உணவு, மருத்துவ வசதி என எதுவும் இல்லாத நிலையில் தவிக்கும் மக்கள் அடுத்த கட்டமாக எதிர்நோக்கப் போகும் நெருக்கடி என்ன? என்பதே இன்றைய பிரதான கேள்வியாகும். காஸாவுக்குள் இஸ்ரேல் படை தரைவழியாக ஊடுருவியுள்ள நிலையில் அந்த பிரதேசம் முழுவதையும் ஆக்கிரமிக்கப் போகின்றதா? அல்லது பாதுகாப்பு நிலைமைகளை கையாளப் போகின்றதா? என்பதே முக்கிய கேள்வியாகும் .
அவ்வாறு இஸ்ரேல் நடந்துகொண்டால் அது பலஸ்தீன மக்கள் மீதான ஒடுக்கு முறையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏலவே இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களை மீள வழங்காத நிலையில், கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை அவ்வளவு சுலபமாக மீள வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஹமாஸை ஒடுக்குவதற்கு அப்பால் காஸாவை கைப்பற்றுவது அதன் பிரதான நோக்கமாக இன்று மாறிவிட்டது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கொலன்ட், தங்கள் படைகள் “காஸா நகரின் மையத்தில்” இருப்பதாக கூறியுள்ளதுடன், இஸ்ரேல் தற்காப்புப் படைகள் தரை, வான் மற்றும் கடல் துருப்புக்களுடன் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறியுள்ளார்
இஸ்ரேலிய படைகள் காஸாவை துவம்சம் செய்து வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் இறப்பு மற்றும் துன்பத்தின் அளவைக் கணக்கிடுவது கடினம் என்று கூறியுள்ளது.
இந்த விதமான பின்னணியில் அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து நோக்கத்தக்கதாகும். அதாவது இஸ்ரேல்-–ஹமாஸ் போர் முடிவுக்கு வந்த பின்னர் காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ ஆக்கிரமிப்பு நடத்துவதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“ காஸா வை இஸ்ரேலிய படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது சரியான செயல் அல்ல” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
காஸா நகரின் மையத்தில் தமது துருப்புக்கள் நிலைகொண்டிருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர் கொலன்ட் இராணுவத் தாக்குதலைத் தொடரப்போவதாக தெரிவித்தார். இதேவேளை இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சு களுக்கு மத்தியில் காஸாவில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பலஸ்தீனிய அமைப்புகள் கூறுகின்றன
“தந்திரோபாய இடை நிறுத்தங்கள்”
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போருக்குப் பின்னர் காஸாவின் பாதுகாப்பை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என்று கூறி ஒருநாள் கழிந்த நிலையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இஸ்ரேல் “காலவரையின்றி ” காஸா பாதுகாப்பிற்கான பொறுப்பை ஏற்கும் என்று நெதன்யாகு திங்களன்று தெரிவித்திருந்தார் , மேலும் “அந்தப் பாதுகாப்பு பொறுப்பு எங்களிடம் இல்லாத போது, நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஹமாஸ் பயங்கரவாதம் வெடித்தது” என்றும் அவர் கூறினார்.
“மோதலுக்குப் பின்னர் காஸா எப்படி இருக்கும் , ஆட்சி எப்படி இருக்கும் என்பது பற்றி ஆரோக்கியமான உரையாடல்கள் அவசியம் இருக்க வேண்டும்” என்றும் அது ஒக்டோபர் 6 அன்று தோன்றியது போல் இருக்க முடியாது” என்றும் அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது
காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறு என்று அமெரிக்க ஜனாதிபதி முன்னர் ஒரு கட்டத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போர் இடைநிறுத்தம் ஒன்றின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பைடன் இஸ்ரேலிய பிரதமர் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற பெருகிவரும் கோரிக்கைகளுக்கு மத்தியில், மனிதாபிமான காரணங்களுக்காக போராடுவதில் “தந்திரோபாய இடைநிறுத்தங்கள்” பற்றி பேசியதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது .
காஸாவை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிப்பதை எதிர்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.எந்த வடிவத்திலும் காஸா பகுதியை இஸ்ரேல் நீண்டகாலமாக மீண்டும் ஆக்கிரமிப்பதை அமெரிக்கா எதிர்க்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், காஸாவிற்கு வெளியே பலஸ்தீனியர்களை கட்டாயமாக இடம்மாற்றுவதை அமெரிக்கா ஆதரிக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
மேலும் “இந்த முடிவுகளில் பலஸ்தீனியர்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதும், காஸா பலஸ்தீன நிலம் என்பதும், அது பலஸ்தீன நிலமாகவே இருக்கும் என்பதும் எங்கள் கருத்து” என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜோ ன் கிர்பி கூறினார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்துக்கள் பற்றிய கேள்விக்கு செய்தித் தொடர்பாளர் பதிலளிக்கையில்,
இஸ்ரேலியப் படைகள் காஸாவை மீண்டும் ஆக்கிரமிப்பது நல்லதல்ல என்று ஜனாதிபதி தொடர்ந்து நம்புகிறார். இது இஸ்ரேலுக்கு நல்லதல்ல இஸ்ரேலிய மக்களுக்கு நல்லதல்ல” என்றும் கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் உரை தொடர்பில் புதிய விளக்கம்
தற்போதைய மோதலுக்குப் பின்னர் காஸாவின் எதிர்காலம் குறித்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் இரவு தெரிவித்த கருத்துக்களை இஸ்ரேலின் போர் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது காஸாவின் “ஒட்டுமொத்த பாதுகாப்புப் பொறுப்பை” இஸ்ரேல் ஏற்கும் என்று நெதன்யாகு கூறியபோது, அந்த பகுதி ராணுவ மற்ற பகுதியாக இருப்பதை உறுதி செய்யும் என்றும், இஸ்ரேல் பாதுகாப்பு படை ஏதேனும் புதிய பயங்கரவாத அச்சுறுத்தல் உருவாகாது அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் ஆனால் இஸ்ரேல் மீண்டும் அப்பகுதியை ஆக்கிரமிக்கவோ அல்லது ஆட்சி செய்யவோ முனையாது என்றும் விளக்கியுள்ளார்.
நாளொன்றுக்கு 169 குழந்தைகள் பலி
என்று தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக, தெற்கு காஸா நகரங்களான கான் யூனிஸ், ரஃபா மற்றும் டெயிர் அல்-பலாஹ் ஆகிய இடங்களில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. – ஆனால் சமீபத்திய மோதலில் வடக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கூறியுள்ளனர். இதனிடையே ரஃபா எகிப்தின் எல்லையில் காஸாவின் தெற்கு விளிம்பில் உள்ளது. இது பாதுகாப்பான பகுதி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இன்று ரஃபாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடுமையான குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. கட்டிட இடிபாடுகளிலிருந்து உயிர் பிழைத்தவர்களை மக்கள் வெளியில் இழுத்தெடுக்க அவர்கள் தங்கள் வெறும் கைகளைப் பயன்படுத்தி வரும் துன்பகரமான நிலைமை தொடர்கிறது. காஸாவில் 4,100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 10,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹமாஸின் இராணுவப் பிரிவு இஸ்ரேலியப் படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இஸ்ரேலிய இராணுவ வாகனங்களை சேதப்படுத்துவதாகவும் கூறுகிறது. மேற்கு காஸா நகரின் கடற்கரை அகதிகள் முகாமிற்கு அருகாமையிலும் காஸாவின் வடகிழக்கு மூலையிலுள்ள பெய்ட் ஹனூனுக்கு அருகாமையிலும் பல இராணுவ வாகனங்களை கடந்த நாளில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்ததாக அது கூறியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் காஸா நகருக்குள் ஊடுருவி ஆழமாக செயற்பட்டு வருவதாகவும் ஆயிரக்கணக்கான ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
ஆனால் அரசாங்கத்தின் சொந்த ஆதரவாளர்களில் 39% பேர் மட்டுமே அதற்கு மிகச் சிறந்த மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். (மற்றும் 5% எதிர்க்கட்சி வாக்காளர்கள்), இதர மக்கள் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் காஸாவில் ஹமாஸை ஒழிப்பதே மிக முக்கியமான இலக்கு என்று 63% யூத குடிமக்கள் கூறியுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் கருத்து
இங்கிலாந்தில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, யூத சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தமது அரசாங்கம் “எதை வேண்டுமானாலும் செய்யும்” என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். மேலும் சுனக் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதாகவும், சமீபத்திய நாட்களில் 100 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் குடிமக்கள் ரஃபா வழியாக காஸாவை விட்டு வெளியேறியதை உறுதிப்படுத்தியதாகவும் கூறினார்.
இஸ்ரேலிய வான் தாக்குதல்
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய வான் தாக்குதலில் கான் யூனிஸில் பல வீடுகள் அழிக்கப்பட்டன. இறந்த மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து உடல்கள் இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது குண்டுவீச்சுடன், இஸ்ரேல் காஸா மீது ஒரு முற்றுகையை விதித்துள்ளது, உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கான அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் மக்கள் சொலொண்ணா துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஆர். பி என்