ஐயாயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐயாயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறை பாரிய வீழ்ச்சி போக்கிற்கு செல்லும். எனவே, அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வைத்தியர்களின் தேவைப்பாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே கோரியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version