பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து இன்று வியாழக்கிழமை (9) காலை வெளியேறிய கொபவக கோவின்னவைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவன் வீட்டுக்கு அருகில் உள்ள வீதியில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 12 வயதுடைய ஹொரண பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவன் பாடசாலைக்கு செல்வதற்காக தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரம் சென்று கொண்டிருந்தபோது வீதியில் வீழ்ந்ததில் காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஹொரண வைத்தியசாலை பொலிஸார் புலத்சிங்கள பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version