திருகோணமலை பகுதியில் சற்று முன்னர் சிறிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் இன்று (12) மதியம் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக கந்தளாய் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்

கந்தளாய் குளத்திற்கு அருகேயுள்ள கோயில் கிராமம்,முள்ளிப்பொத்தானை அண்டிய பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டபோதிலும் சேதங்கள் இல்லை என்று அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர் என்றாலும் அப்பிரதேச மக்களிடையே அச்ச உணர்வு காணப்படுவது குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply

Exit mobile version