யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளத்துடன் , பெற்றோல் ஊற்றி உடமைகளுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டின் கதவு , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றின் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்த பின்னர் வீட்டின் வளவுக்குள் பெற்றோல் குண்டு ஒன்றினை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version