புலிகளின் நிழல் கூட்டமைப்பு: தடைசெய்ய கோரிக்கை

Editorial / 2023 நவம்பர் 23 , பி.ப. 12:18 – 0 – 39

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தவறு செய்துவிட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வரவு-செலவுத் திட்டத்தின் மீதான குழுநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழீ​ழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.

புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைச்செய்து இருக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு செய்துவிட்டார்.

மஹிந்த பாவம் பார்த்தார். இப்போது அது பெரும் அனர்த்தமாக உள்ளது என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version