கடந்த ஒக்டோபர் 7 தொடக்கம் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏற்பட்ட அழிவு விபரம்,

• சுமார் 6,000 சிறுவர்கள் மற்றும் 4,000 பெண்கள் உட்பட 14,800க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

• 2.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட காசாவில் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

• இவ்வாறு இடம்பெயர்ந்து பலஸ்தீனர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்தின் வசதிகளில் அடைக்கலம் பெற்றிருந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 191 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 798 பேர் காயமடைந்தனர்.

• காசாவில் பாதிக்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் பல டஜன் வழிபாட்டுத் தலங்களும் அடங்கும். போருக்கு முன் வடக்கு காசாவில் 24 மருத்துவமனைகள் இயங்கின. இதில் 22 மருத்துவமனைகள் செயலிழந்தோ அல்லது புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலையிலோ உள்ளன.

• தெற்கு காசாவின் 11 மருத்துவ வசதிகளில் தற்போது எட்டு மாத்திரமே இயங்குகின்றன.

• எரிபொருள், நீர் மற்றும் கோதுமை மா இல்லாதது அல்லது இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்ததால் காசாவில் எந்த ஒரு பேக்கரியும் இயங்கவில்லை

Share.
Leave A Reply

Exit mobile version