காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாகவே லொறி வீதியை விட்டு விலகி கொங்கிரீட் சுவரொன்றுடன் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் லொறியின் பின் பகுதியில் இருந்து பயணித்தவர்களில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version